உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 83 வடக்கே இருக்கின்ற காங்கிரசு அதிகாரப் பூர்வமானதா அல்லது காமராசர் தலைமையில் தமிழ் நாட்டில் இருக் கின்ற காங்கிரசு அதிகாரப் பூர்வமானதா என்பது விளக்க முடியாத ஒரு புதிர்! பழைய கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து கம்யூனிஸ்டு தவிர' உட்பட காங்கிரசு எல்லா எதிர்க் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் வெளி நடப்புச் செய்திருக்கின்றன; ஆனால், இங்கே அந்தச் செய்தி, 'நவசக்தி'யில் சிறியதாக்கப் பட்டு, ஒப்பந்தம் சரிதான்' என்று அமைச்சர் சுவரண்சிங் அளித்த பதில் கொட்டை எழுத்துக்களில் வெளியிடப்பட்டிருக்கிறது! இது, பழைய காங்கிரசுக்குள்ளே இருக்கின்ற கொள்கைக் குழப்பம்! இத்தனையையும் ஒதுக்கி வைத்துவிட்டு, காமராசருக்குப் பிறந்தநாள் விழா சிறப்புற நடைபெற்றது கண்டு நாமும் மகிழ்கிறோம். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மாணவர் காங்கிரசார் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழாவில் நானே கலந்து கொண்டு வாழ்த்திப் பேசியும் இருக்கிறேன். உடன்பிறப்பே - ஒன்று கவனித்தாயா? அவர்கள், பிறந்த நாள் விழா கொண்டாடலாம்; சுவரொட்டிகள் வித விதமாக ஒட்டலாம்; வளைவுகள்-தோரணங்கள்-ஊர்வலங் கள் எல்லாம் நடத்தலாம்; ஆனால், நம்மவர்கள் பிறந்த நாள் விழா கொண்டாடினால் அவர்களுக்கு எவ்வளவு ஆத்திரம் கரை புரளுகிறது! கேலி- கிண்டல்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/93&oldid=1694594" இலிருந்து மீள்விக்கப்பட்டது