உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 85 இது, காமராசர் பிறந்த நாள் விழா ஊர்வலச் சிறப்புக் களில் ஒன்று! அந்தக் காட்சி கண்டு காமராசர், கை அசைத்து மகிழ்ந்திருக்கிறார்! போலீசாரில் சிலர் தவறு செய்யக்கூடும்; அதற்காக அந்த இலாகாவையே பழி கூறுகின்ற ஒரு காட்சியை- முன்னாள் முதல்வர் ஒருவரின் பிறந்த நாளில் இடம் பெறச் செய்வதும், அதனை மகிழ்ச்சியுடன் 'தினமணி' யார் வெளியிடு வதும் 'ஒழுங்கு முறை' தானா என்று சிந்திக்க வேண்டும். மிக ஊர்வல ஏற்பாடுகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் இவைகள உற்சாகத்துடன் வனித்த நண்பர் கவியரசு கண்ணதாசன் அவர்களின் கண்களிலே இந்த அலங்கார வண்டி எப்படித் தெனபடாமல் போயிற்று என்றே எனக்குப் புரியவில்லை. காந்தி ஜெயந்தியை விட-நேரு பிறந்த நாளைவிட - விமரிசையாகக் காமராசர் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிய காங்கிரசுத் தொண்டர்களின் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன்; அவர்கள், அந்த முயற்சியில் பெற்ற வெற்றிக்காகவும் மகிழ்கிறேன். வி ழா பற்றிச் சொன்னேன்; அடுத்த கிழமை, மேலும் பல விவரங்களை விளக்குகிறேன்-அரசியல் ரீதியாக! அன்புள்ள, கடிதம் II - 6 மு.க. 28 7 - 74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/95&oldid=1694596" இலிருந்து மீள்விக்கப்பட்டது