உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 87 போலீசுக் கமிஷன்' அமைத்து-அதன் பரிந்துரைகளின்படி நிறைவேற்றி வருகிறோம் என்பதை நாடு நன்கு அறியும். ஆனால், அன்றைக்கு நிலைமை என்ன? போலீசாருக்காக 'வக்காலத்து' வாங்கி நான் எழுதியிருந்த காட்சிகளுக்காக, உதய சூரியன்' முழு நாடகமே தடை செய்யப்பட்டு விட்டது! காவல்துறை நண்பரின் வீடு; அவரது மனைவி, குழந்தை யைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுப் பாடுகிறாள்- 86 போலீசு வேலைக்கென்று போகின்ற ஙொப்பனுக்கு புத்திரனாய் வந்துதித்த தரித்திரமே கண்வளராய்- போகின்ற ஙொப்பனிடம் துப்பாக்கித் தூக்கிகிட்டு பழம்பாக்கி கேட்டுகிட்டு வருகின்றார் கடன்காரர் காக்கி உடை மாட்டிகிட்டு சேப்புத் தொப்பிப் போட்டுகிட்டு போகின்ற ஙொப்பனுக்கு உன்னைப்போல நாலுவந்து பிறந்துவிட்டால் காவி உடை வேணுமடா! கமண்டலமும் தேவையடா!" இதுபோலத்தான், அந்தத் தாலாட்டு-இதற்காக நாடகமே தடைக்கு ஆளாயிற்று! நாம் அடக்குமுறைக்கு ஆளான போதும், போலீசாருக் காகப் பரிந்து பேசினோம்; ஆனால் காங்கிரசு நண்பர்களோ, இன்றைக்குப் போலீசுப் பாதுகாப்புப் புடைசூழ, போலீசு இலாக்கா, 'குடிகார இலாக்கா' என்னும் பொருள்பட ஊர்வலம் நடத்திக் காட்டுகிறார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/97&oldid=1694598" இலிருந்து மீள்விக்கப்பட்டது