உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கலைஞர் என்ற இருப்பது முறையா? என்ற கேள்விகள் நாட்டில் எழுந் துள்ளன! அதற்குள்ளாக, ஆளுங் காங்கிரசுக் கட்சியினர் - அவர் தம் ஆதரவாளர்கள் நீதிமன்றத்தையே கண்டிக்கிற வகையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதும், நீதிபதிகளின் கொடுப்பாவிகளைக் கொளுத்துவதும், 'நாட்டுக்கு எப்படிப் பட்ட வழிகாட்டும் தன்மை' என் என்று நமக்குப் புரியவில்லை! உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் 'அப்பீல்’ செய்து கொள்ளப் போவதாக அறிவித்து விட்டு, இந்திராவின் சேவை - நாட்டுக்குத் தேவை’ என்று ஊரெல்லாம் சுவரொட்டிகளை ஒட்டுவது, எந்தவகை அரசியல் என்பதை அவர்கள் தான் விளக்கவேண்டும். - 'இந்த முறைகள் சரியானவை தான்' என்று வாதிட்டால், நமது கழக நண்பர் மலைச்சாமியின் தேர் தல் செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தபோது, 'மலைச் சாமியின் சேவை - மதுரை மாவட்டத்துக்குத் தேவை" என்று சுவரொட்டிகளை ஒட்டியிருக்கலாமே! வரி இன்று அலக பாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை வரிக்கு. ஏடுகள் விமர்சித்துத் தலையங்கங்கள் தீட்டு கின்றன: 'தவறு' என்று கூறவில்லை; அந்தத் தலையங்கங்களைப் படித்து, நாமும் சட்ட நுணுக்கங்களைப் புரிந்துகொள் கிறோம்! பாவம் - பரிதாபத்திற்குரிய ய மலைச்சாமி! அவர் தேர்தல் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு எழுதிய போது, அதுபற்றிய விளக்கமான தலையங்கங்களை எழுத ஏடுகள் தயாராக இல்லை! பிரதமர் இந்திரா காந்தியும் - சாதாரண ஒரு பிரஜை மலைச்சாமியும் ஒன்றாக முடியுமா? முடியாதுதான்!