உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கலைஞர் அதனைத் தாங்கிக் கொண்டு நிதானமாக விளக்கங்கள் அளிப்பாரே; அதையா? இலட்சியத்தை அடைய எந்த இழப்புக்கும் தயாராக ருக்கவேண்டுமென்று, அண்மையில்கூட அவரது பிறந்த நாள் விழா கூட்டத்தில் முழங்கினாரே; அதையா? 6 e இது தான் நான் கலந்து கொள்ளும் கொள்ளும் கடைசிப் பொதுக்குழுவாக வாக இருக்கு மென்று திருப்பரங்குன்றம் பாதுக்குழுவில் ஆர்த்தெழுந்து பேசினாரே, அதையா? உடன்பிறப்பே, ஜூன் மூன்றாம் நாள் என் பிறந்த நாளுக்கு வீட்டுக்குவந்து, அந்த இயலாத உடம்போடு எனக்கு மாலை அணிவித்தார். அது ஜூன் மூன்று! இதோ ஆகஸ்டு மூன்றில் நான் அவருக்கு - இல்லை! இல்லை! அவரது உடலுக்கு மாலை அணி வித்திருக்கிறேனே! அய்யகோ! எத்தனையோ கவலைகள் உண்டு அவருக்கு - என்னைப் போல அவைகளை யெல்லாம் - மனதில் அழுத்தி வைத்துக் கொண்டேயிருந்ததால்தான், அந்தக் கொடிய நோயே அவரைத் தாக்கித் தகர்த்தது. அவரது கவலைகளில் எல்லாம் கழகத்தை வலுப்படுத்தி, இலட்சிய வேண்டும் என்பதுதான்! பெருங் கவலை வெற்றியடைய அவரது அந்தக் கவலையை நாம் மதித்து, அவர் கொண்டிருந்த கவலைதீர தொடர்ந்து உழைத்திட ஒற்று மையாக சபதம் ஏற்றுக் கொள்வதுதான் அந்தத் தலைவருக்கு நாம் காட்டும் நன்றிக் கடனாகும். அன்புள்ள. மு. க. 4 - 8 - 75