உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 111 இதனால் பாதிக்கப்படுபவர்களின் வெறுப்புக்குப் பயப் படுவதுமில்லை ; பயனடைகிற, பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மக்களின் நன்றிக்காகவும் ஏங்கிக் கிடப்பதில்லை என் கடமையை அண்ணா வகுத்த வழியில் செய்து கொண்டிருக் கிறேன். மிகச் சாதாரண ஒரு குடும்பத்தில் தோன்றிய சாமான்யன் என்பதற்காக எனக்குத் தகுதி இல்லை என்கிறார் போலும்! அல்லது கல்லூரி காணாதவன் என்று தகுதியற்ற நிலை மைக்கு என்னைத் தள்ளுகிறார் போலும்! ஆம், என்றால் என்னைப் போலவே கல்லூரி காணாத பெருந்தலைவர் காமராசரின் தலைமையில் அமைச்சர் பதவியை வகித்தாரே; அதனை மறந்துவிட்டாரா? ஒருவேளை; 'பதவி" இருந்தால் எல்லாம் மறந்து விடும்போலும்! அதனால்தான் இப்போது காமராசரையும் தாக்குகிறார். அனைத்துத் தகுதியும் படைத்தவன் என்று எப்போதுமே நான் நினைத்தது கூட இல்லை. சட்டப் பேரவையில் ஒருமுறை எதிர்க்கட்சி வரிசையில் இருந்த என் அருமை நண்பர் ஒருவர், "கருணாநிதியின் சர்க்கார் மூன்றாந்தர சர்க்கார்!" என்று ஆத்திரத்தோடு அர்ச்சனை செய்தார். அப்போதும் நான் அமைதியாக எழுந்து என்ன பதில் சொன்னேன்? "இது மூன்றாந்தர சர்க்கார் என்றார். தவறு! திருத்திக் கொள்ளவேண்டும். இது மூன்றாந்தர சர்க்கார் கூட இல்லை; நாலாந்தர சர்க்கார். நாலாந் தர மக்களுக்காக நடத்தப்படுகிற சர்க்கார்! என்றுதானே விடையளித்தேன்; விளக்கம் தந்தேன்! நெல்லையில், தீர்மானத்தையொட்டிப் பேசும்போது கூட நமது பேராசிரியர் அவர்கள், "இந்த முயற்சியில் ஈடு படச் சொல்வதின் மூலம், கருணாநிதிக்கு நாங்கள் ஒன்றும்