உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 125 அவர் என்ன இருந்தாலும் பெரியவர்கள் பெரியவர்கள்தான்! ஆயிரம் அபிப்பிராய பேதங்கள் பக்தவத்சலனார் கட்கும் நமக்கும் இருந்தாலும், அவர் அரசியல் பண்பாடு மிக்கவர். பெருந்தன்மை படைத்தவர். அதற்கேற்பக் கருத்துக்களைத் தெரிவிப்பவர். அவரைப் போன்ற உள்ளம் படைத்த சிலர் காமராசரின் இரங்கல்கூட்டத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். நல்ல அதனை ஒரு எரிச்சல்காரர் கண்டிக்கிறார். அதையும் மித்திரன் அலங்காரமாக வெளியிடுகிறது. பெரியவர் பக்தவத்சலம் அவர்களுக்கு நெருங்கிய தொடர்புடைய ஏடு அது! அரசியல் லாபம் பெற காமராசரைப் போற்றுகிறோ மாம்! அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்கிறோமாம்! பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் நம்மை ஆளாக்கி வளர்த்தவர்கள். அவர்கட்கு நமது மரியாதையை எல்லா வகையிலும் செலுத்தினோம்; செலுத்திக் கொண்டு வருகிறோம். மூதறிஞர் ராஜாஜியின் பிறந்த இல்லத்தை நினைவுச் சின்னமாக்கியதும்; ராஜாஜி நினைவாலயம் அமைத் ததும். கட்சி மாறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு செய்த பணிகளே தவிர, அரசியல் நோக்கத்துடன் என்று யாராவது கூறமுடியுமா? எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு 1601 செய்திருக்க வேண்டிய செயலான எட்டயபுரம் பாரதி இல்லத்தை இந்த அரசு, நினைவுச் சின்னமாக்கியதே; அது அரசியல் காரணமென் று அறிக்கை அன்பர்' கூறுகிறாரா? சிதம் பரனார், சிறையில் இழுத்த செக்கைக் கண்டுபிடித்துச் சென்னையில் காட்சிப் பொருளாக்கியிருப்பது அரசியலுக் காக என் என்று அந்த நண்பர் வாதிடுகிறாரா? தில்லையாடி யில் வள்ளியகமை நகர் இந்த ஆட்சிக் காலத்தில்தானே உருவாக்கப்பட்டது! அதுவும் அரசியல்தானா? அறிஞர் அண்ணா உலகத் தமிழ் மாநாடு கூட்டியதும் அப்போது, தேச தலைவர்கள், தமிழ்ச்சான்றோர்கள் சிலைகளைத் திறந் ம்