உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கலைஞர் போல் வந்துவிட்டார்கள். அவர்கள் பேசி முடிவு செய்து காமராசரின் உடலை காந்திஜி மண்டபத்திற்கு அருகில் வைத்து நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமென்று கூறினார்கள். அன்று இரவே முதலமைச்சரும், அமைச்சர் ப.உ. சண் முகமும் எங்களை அழைத்துக்கொண்டு கிண்டிக்குச் சென்று. கார் விளக்குகளைப் போட்டு இடத்தைத் தேர்ந்தெடுத்து இரவோடு இரவாக புல்டோசர்களை வைத்து மரங்களை எல்லாம் அகற்றி, இடத்தைச் செப்பனிட்டார்கள். அவர்கள் காட்டிய பரிவையும், பெரியவர்மீது வைத்திருந்த மரியாதையையும் எங்களால் மறக்க முடியாது. நவசக்தியில் யுள்ளேன். (24-10-75 நவசக்தி) 9 9 வந்ததை மட்டுமே சுட்டிக் காட்டி தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திலும், மேலவைப் பேச்சிலும், "மூத்த உடன்பிறப்புக்குச் செய்வதுபோலக் கருணாநிதி, காமராசருடைய காரியங்களைக் கவனித்தார் என்ற கருத்தையும் நாயுடு அவர்கள் உணர்ச்சி பொங்க வெளியிட்டதையும் யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் நீண்டநாள் அக்ஞாத வாசத்திற்குப் பிறகு, செல்ல பாண்டியனார், திடீரெனத் தி.மு.கழகத்தின் மீது பாய்ச்சல் நடத்துவது புதிய விளம்பரத்தின் அடிப்படையில் இருக்குமேயானால் அதற்கும் நாம்தானே பயன்படுகிறோம் என்று ஒருவகையில் ஆறுதல் பெறலாம். ஆனால் முழுக்க முழுக்க திரு. ராஜாராம் நாயுடு அவர்களையும், திரு.ராமச் சந்திரன் அவர்களையும் கலந்துகொண்டு செய்த காரியத்தை வேண்டுமென்றே திசை திருப்பிப் பேசுவது முறையல்ல. அழகுமல்ல. அரசியல் பண்பும் ஆகாது. பெரியவர் காமராசரின் உடல் தேனாம்பேட்டை மைதானத்தில் தகனம் செய்யப்பட்டிருந்தால், இப்போது டைபெறுகிற பூசலில் அவரது நினைவிடத்தில் மலர்