உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கலைஞர் இந்த நூற்றாண்டில் 'இந்த ஆண்டு போல் மழை பொய்த்த ஆண்டே கிடையாது' என வானிலை விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர்! இயற்கையை எதிர்த்துப்பெரும் போராட்டம் நடத் தப் புறப்பட்டிருக்கிறோம்! இடையிலே சில விநாடிகள் இளைப்பாற - ஆறுதல் கொள்ள -ஊக்கம் பெற- உற் சாகத்தை வரவழைத்துக் கொள்ள- இந்த அளவுக்கே இந்த ஆண்டு பொங்கல் விழா இருந்திட முடியும்! டு அண்ணன் மறைந்து.-- அதனால் ஏற்பட்ட துயரைத் தணித்துக் கொள்ள முடியாமல் தவித்தபோதுதான், 1969 ல் இயற்கையின் அடுத்த சீற்றம், தமிழகத்தைத் தாக் கியது! கடுமையான அந்த வறட்சியை எதிர்த்து நமது வலிவு மிகுந்த கரங்களை உயர்த்தினோம்! எங்கும் வறட்சி நிவாரணப்பணிகள்! கிராமப்புறங் களில் வேலை வாய்ப்புக்கள்! வெறும் உதவிப்பணிகளாக இல்லாமல், எதிர் காலத் திற்கு உபயோககரமான பணிகளாக, நிறைவேற்றப் பாடு பட்டோம்! பயன் கண்ட மக்கள் பரவசமுற்றனர்! அவர் களைத் தாக்கிய வறட்சியிலிருந்து அவர்களைக் காத்திட இராணுவ நடவடிக்கை போல், வறட்சி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டோம்! நல்லோர் நல்லோர் வாழ்த் தினர்! நல்லதை நினைத்துப் பழக்கமில்லாதோர், நாத் தழும்பேறி நாராசம் பேசினர்! - நமது கவனம் மக்களிடமே இருந்தது! சுடு சொற்கள்- எரிச்சல் கணைகள் அவதூறு அஸ்தரங்கள் - நம் பணியின் முன்னால், முனை மழுங்கிப் போயின! வறட்சியைப் புறங் கண்டோம்-வாகை சூடினோம் - இயற்கையின் கோபத்தை எதிர்த்து! அதே 1969-இப்போது அடிபட்ட பாம்பு போல், சீறிச் சினந்து, தமிழ் மக்களின் வாழ்வை நஞ்சாக்கப் படம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/16&oldid=1695040" இலிருந்து மீள்விக்கப்பட்டது