உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 நினைவுக்கு வரத் தவறவில்லை. கலைஞர் அந்த 11-ஆம் நாள் நினைவை என்னருகே இருந்த அமைச்சர்கள் மாதவன், கண்ணப்பன் இருவரிடமும் விளக்கிக் கூறி, என் விளக்கமும் நினைவாற்றலும் சரிதானா என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள 1957-ஆம் ஆண்டு சட்டப்பேரவை நடவடிக்கை குறிப்புகள் அச்சியற்றப்பட்ட புத்தகங்களைக் கொண்டுவரச் சொல்லிப் புரட்டிப் பார்த்தேன். அந்த நடவடிக்கைக் குறிப்பை அப்படியே வரி தவறாமல். எழுத்துக் குறையாமல் இதோ உன் முன்னால் வைக்கிறேன். 1957 ஜூலை 11-ஆம் நாள்- சட்டப்பேரவையில் கேள்வி நேரம். குளித்தலைத் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் மு கருணாநிதி, சட்டமன்றத்தில் வைக்க ட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் பற்றிய விளக்கக் கேள்வி ஒன்றைக் கேட்கிறார். [பக்கம் : 2317 ஸ்ரீ. எம். கருணாநிதி:- தரப்பட்டுள்ள பட்டியலில் 'சாணான்' என்றும் ‘வண்ணான்' என்றும் குறிப்பிட்டிருக்கிறது. அதில் ‘ன்' என்ற எழுத்தை மாற்றி 'ர்' என்ற எழுத்தைப் போட்டு பட்டியல் தயாரிக்க அரசாங்கம் முன்வருமா? கனம். ஸ்ரீ. கக்கன்:- சபாநாயகர் அவர்களே! கனம் அங்கத்தினர் அவர்கள் சொன்னது மாதிரி மாற்றம் வேண்டியதுதான் என்றிருந்த போதிலும் செய்ய மத்திய சர்க்காரில் இம்மாதிரிதான் பெயர்கள் உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது. கனம். ஸ்ரீ.சி.சுப்ரமணிபம்:- “ன்" என்ற எழுத்தைப் போட்டிருப்பதால் மரியாதை குறைந்துவிடாது. சிலர் "டிரைவர்" என்பதை, 'டிரைவன்' என்று மரியாதைக் குறைவாகச்