உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 கலைஞர் பெரியவையும் நமது சாதனைகளில் சிறியவையும் உண்டு. ஆனால்; இவைகளுக்காக எதிர்க்கட்சியில் இருந்து வாதாடும்போது, சத்திரத்துப் பேர்வழிகளைப்போல அல்லவா கருதப்பட்டோம்! இந்தச் சத்திரத்துப் பேர்வழிகளாலும் சரித்திரம் படைக்க முடியும் என்பதை இன்து நிரூபித்து வருகிறோமா; இல்லையா? அந்தச் சரித்திரம் படைத்த கதையைத் திரும்பிப் பார்க்க, மேலும் முன்னேற, தன்மான முரசு கொட்ட, தலைநிமிர்ந்து நடைபோட, என் தங்கம் நிகர் உடன் பிறப்பே; கோவைக்கு வா! கொள்கை வைரமே! குடும்பத்தோடு புறப்படு! அன்புள்ள, மு.க. 10-12-75