உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 C 6 6 - கலைஞர் "துறவு" என்பதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தூய நற்பணி ஒன்றினைத் தொடங்கிட, பற்று' குறுக்கே நிற்கு மானால் அதனை இடறிவிட்டு நடந்திட துறவு எனும் மனத்தெம்பு இருந்திடல் வேண்டும். இந்தியநாட்டு விடுதலைக் கொடியைப் பறக்க விடுவதற்காகக் காந்தி யடிகள். தன் துணைவியார் மீது கொண்ட பற்றையும். பிள்ளைகள் மீது கொண்ட பற்றையும் ஒதுக்கிவைத்து விட்டுத்தானே பலமுறை சிறைக் கோட்டத்தில் வாடி வதங்கினார். வனப்புமிகு வால்பக் காலத்தின் பெரும் பகுதியை சிறைச்சாலையில் கழித்தாரே பண்டித நேரு, அவர் கொண்டிருந்த பற்றுக்களைத் துறந்துவிட்டு தானே! சிறைச்சாலையில் செக்கிழுத்து வதைட்டாரே; சிதம்பரனார்- வைக்கத்தில் போராடி அடக்குமுறைக்கு ஆளாகி பலதடவை சிறைபுகுந்தாரே; பெரியார் - தமிழ் மொழிகாக்கவும் தமிழர் நலன்களைக் காக்கவும் - கெ. காடுஞ் சிறைவாசங்களை ஏற்றுக் கொண்டாறே; அண்ணா- அவர்கள் எல்லாம், சுகத்தைத் துறந்திடும் மன உறுதியை யும் பெற்றிருந்ததால்தானே இந்தச் சமுதாயத்தை அழிவில் இருந்து காப்பாற்ற முடிந்தது. உயிர்மீது கொள்ள வேண்டிய பற்றையே துறந்து தியாகச்சுடர்களாக ஆகி விட்ட தீரர்களின் எண்ணக்கை கொஞ்சமா? அந்த தியாக நெஞ்சங்களை, துறவு கொள்ளவும் துணிந்திடும் உள்ளங்களை பற்று பாசங்களை உதறிவிட்டுத தாங்கள் கொண்ட கொள்கைக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்ட இதயங் களை - எண்ணிட வேண்டுமென்பதற்காகவும், எந்தவொரு சோதனைக்கும் பின்னடையாத மன வலிமை பெற்றிட வேண்டுமென்பதற்காகவும் தான் தேவைப்படின் 'துறவு'க் கும் துணிகிற உடன் உடன் பிறப்பாம் உனக்கு, துறவுக்குத் தொடர்புடைய சில சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கடிதங்கள் தீட்டினேன். நம்முடைய காலத்தைச் சிலபேர் கணித்துக் கொண்டி ருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாள்? என்று