உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 கலைஞர் வகித்திடவும் - நடத்திக் காட்டுகிற நமது உடன் பிறப்புக்களை நான் எங்ஙனம் நன்றிகூறி வாழ்த்துவது என்றே புரியவில்லையே! உடன்பிறப்பே, கோவைக்கு வரும் நீ, அதுவும் குடும்பத்தோடு வரும் நீ, குழந்தை குட்டிகளோடு வரும் நீ, எச்சரிக்கையுடன் வருக. குளிர் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். எதற்கும் ஒரு போர்வை உன் பையிலோ, பெட்டியிலோ இருப்பது நல்லது. பேருந்துகளானாலும் அல்லது வேறு வாகனங்களானாலும், வேகம் அதிகமின்றி சிறு தொல்லையும் உனக்கோ அல்லது மற்றவருக்கோ ஏற்படாமல் நிதான மாகப் பயணம் செய்திட வேண்டுமென்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். வசதி வாய்ப்புக்கள் அனைத்தும் செய் திருப்பதாக வரவேற்புக் குழுத் தலைவரும் செயலாளர்களும் கூறுகிறார்கள் எனினும், இலட்சக்கணக்கில் கூடும் பொழுது, சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அவைகளைப் பொருட்படுத்தாத பொறுமையை அணிகலனாகக் கொண்டு மாநாட்டைச் சிறப்பித்திட வேண்டுகிறேன். அண்ணன் இருந்து அந்த மாநில மாநாடுகளுக்கெல்லாம் உன்னை அழைத்தார். இன்று அண்ணியார் வழி மொழிந்திட நான் தலைமையேற்க இருக்கிறேன்; இந்த உடன்பிறப்பு; என் உயிரே! உன்னை அழைக்கிறேன்! என் கண்ணின் கருமணியே! உன்னை அழைக்கிறேன்! என் இதயமே! வா! என் விழியே! வா! கோவைத் திருநகரில் உன்னை- எங்கிருந்தாலும் நான் தொலைவிலிருந்தாவது பார்த்துக் களித்திடுவேன். நீ இல்லாமல் இருந்தால் அந்த இடமும் எனக்குத் தெரியும் என்பதை நீ அறிவாய்! வா! வா! வா! வண்ணத் தமிழே! வா! வா! வா! அன்புள்ள, மு.க. 22-12-75 --0-