உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதயச் சுமையும் இனிய வாழ்த்தும் ! உடன்பிறப்பே, கொளுத்தும் வெயிலில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடக்கிற தாயைப் பார்த்திருக்கிறோம்.கொட்டும் மழையிலும், கோரப் புயலிலும் குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு, ஓடுகிற தாயையும் பார்த்திருக் கிறோம். அனல் தகிக்கிறதே என்பதற்காகவோ, அடாத மழை கொட்டுகிறதே என்பதற்காகவோ, தாய் வேதனைப் படத்தான் செய்வாள் எனினும், எத்தகைய வேதனையிலும் தன் அன்புக் குழந்தையை அலட்சியப்படுத்திவிட மாட்டாள். ச காரணம், அந்தக் குழந்தை அவள் சதையின் சதை- இரத்தத்தின் இரத்தம்- மூச்சின் மூச்சு. அவள் உணரிச்சி யின் வடிவம் அது. அவள் பாசத்தின் கருவூலம் அது. அதனால், கால் கொப்பளிக்கும் கோடையாயினும், கண்ணைப் பறிக்கும் மின்னலுடன் காது செவிடுபடப் பொழியும் மழையாயினும், அந்தக் குழந்தையை மார் போடும் தோளோடும் அணைத்துக் கொண்டுதான், நடப் பாள் அல்லது ஓடுவாள். ஏன் இதனைச் சொல்கிறேன் என்று உனக்குப் புரிகிற தல்லவா? தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று வறட்சிக் கொடுமை. அதனை எதிர்த்துச் சமாளிக்க எத்தனையோ திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்படுகிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/20&oldid=1695044" இலிருந்து மீள்விக்கப்பட்டது