உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கலைஞர் யவர்கள் என்பதில் இரண்டுவிதக் கருத்துக்களுக்கே இடம் இல்லை! - கலையுலகில் இன்று அதிக ஆக்கம் பெற்றுத் திகழ்கின்ற துறை - திரைப்படத் துறை; அந்தத் துறை வளர வேண்டு மென்பதிலும் வலிமை மிக்க அந்தப் பிரச்சாரக் கருவியின் மூலம் நல்ல கருத்துக்கள் நாட்டு மக்களின் உள்ளத்தில் பதிய வைக்கப்பட வேண்டுமென்பதிலும் நமக்கு வேறு பாடான எண்ணம் கிடையாது! - அவரவர்கள், தங்களின் சிந்தனைகளை முறைப்படி - இந்தத் துறை மூலம் எடுத்துச் சொல்குன்ற சுதந்திரத்தை யாரும் பறித்திடக்கூடாது என்பதிலும் நமக்கு அழுத்த மான அபிப்பிராயம் உண்டு. ஆனால், நிழற்படத்தில் வருவதை - நாடகத்தில் காட்டப்படுவதை ரசிக்கின்ற மக்களின் ஒரு பகுதியினர், கருத்துக்களைத் தேர்ந்தெடுத்துத் தெளிவடைவதற்குப் பதிலாகப் பொய்த்தோற்றங்களை உண்மையென்று கருதி வசமிழந்து போகிறார்களே - அதனால் சமூகத்தில் ஏற்படும் கேட்டினைக் களைந்திட வேண்டும் - அதுவும் உடனடியாக! - லாயிட்ஸ் சாலையில் நடைபெற்ற ஒரு நண்பர் வீட்டுத் திருமண விழாவில் அண்ணா அவர்கள் பேசும்போது, ஒன்றைக் குறிப்பிட்டார்:- நடிகர்கள் மத்தாப்புப் போன்றவர்கள்; வண்ண வண்ண வெளிச்சம் தெரியும் - எரியும் போது! எரிந்து முடிந்து விட்டால், மத்தாப்பு, வெறுங் கரிக்கட்டையாகக் கீழே விழும்! அண்ணாவின் இந்த வாசகத்தின் உண்மைப் பொருளை உணராத மக்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்! ப படத்தில் பாரி மன்னனாக நடிப்பவன் "வாழ்க்கை யிலும் வாரி வழங்குவான்” என்று எதிர்பார்ப்பது... 0 ஏசுநாதர் வேடம் போடுகிறவன், “தான் கொண்ட கொள்கைக்காகச் சிலுவையில் உயிர்விடவும் தயா ராக இருப்பான்" என்று நம்புவது...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/32&oldid=1695058" இலிருந்து மீள்விக்கப்பட்டது