உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 wo ma உடன்பிறப்பே! வரலாறுகள் நமக்கு மிகத் தெளிவாக இருக்கிறது! கலைஞர் உணர்த்தும் பாடம் பதவிகள், பவிசுகள் வரும் - போகும்! - அமைச்சர்கள், 'முன்னாள் அமைச்சர்'களாகி விடு வார்கள்! தியாகிகள், 'முன்னாள் தியாகி'கள் ஆவதில்லை! பதவி நிலைக்காது - தியாகம் நிலைக்கும்! தியாகத்தின் அடிப்படையில் - பதவிகளில் அமர்ந்த வர்கள் நாம்! இந்தப் பதவியிலிருந்தவாறு நமது கழக இலட்சியத்தை அடைந்திட இயலாதெனில், பதவியைத் தியாகம் செய்யும் மனப்பக்குவம் படைத்தவர்கள் நாம்! 'எப்படியும் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்" என்ற ‘அட்டையின் புத்தி' நமக்கு இல்லை! ஜனநாயக ரீதியில் - நாடாளுமன்ற முறையில் - நமது லட்சியங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்பதே நமது எண்ணம்! அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்! 0 6 முழு அது போதாது; தியாகம் செய்யத் தயாராக வேண்டும்" என்ற நிலை பிறந்தால் தியாகம் செய்து பழக்கப் பட்ட நாம் - அந்தக் கட்டத்தையும் புன்னகையோடு வரவேற்கக் காத்திருக்கிறோம்! காஷ்மீரத்து வீர மனிதரின் கம்பீரத் தோற்றம், தியாகத்தின் பெருமையைத்தான் எனக்கு உணர்த்தியது! 3 அவர் - பத -பதவியில் அமரப்போகிறார்; டெல்லி அவரிடம் தூதுமேல் தூது அனுப்பி- பல கட்டங்களில் பேச்சு வார்த்தை நடத்தி - அவர் கேட்ட உரிமைகளில் பலவற்றை வழங்கி - அவருக்குக் காஷ்மீர் மகுடத்தைச் சூட்டுகிறது! மாநிலத்துத் தலைமை கொடைக்கானலில் அவரைக் கொண்டுவந்து கைதி யாக வைத்ததும் டெல்லிதான்! இன்று காஷ்மீரத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/38&oldid=1695064" இலிருந்து மீள்விக்கப்பட்டது