உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கலைஞர் தமிழ் உணர்ச்சியைத் தட்டி எழுப்புகிறார்களே என்று அவர் தம் இதயம் குமுறுகிறது. அடித்தட்டில் உழலும் மீனவர் களுக்கு எதற்காக வலிவான வீடுகள்? என்று, அடிவயிற்றில் குத்திக் கொள்கிறார்கள். வறடசிக் காலமாம் - தண்ணீர்த் தட்டுப்பாடாம்-அதனால் பூம்புகார் விழா கூடாதாம்! வறட்சிக் காலத்தில் கபாலீஸ்வரர் கோயில் திருவிழா நடை பெறலாமாம். திருவாரூரில் தேர்த்திருவிழா நடைபெற லாமாம் சங்கராச்சாரியார் மகாத்மியங்கள் நடைபெற லாமாம் மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் உற்+வம் நடக்கலாமாம். வறட்சியால் வாடும் மக்களோடு சேர்ந்து, அவர்களது துன்பத்தில் பங்கு கொண்டு, அவசரகாலப் பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிற அரசு, ஒருநாள் தமிழ்க்காப்பிய விழாவைக் கொண்டாடியது குற்றமாம். 1952 ஆம் ஆண்டு, தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக சென்னையை விட்டு மக்கள் வெளியூர்களுக்கு ஓடிய போது ஓடியபோது ஆட்சி புரிந்தவர் யார்? ஒரு இவைகள் எல்லாம் மக்களுக்கு மறந்து போயிருக்கும் என்று அந்தக் கூட்டம் கருதுகிறது போலும்! கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீர் கொண்டு வராமல் வீராணம் திட்டம் எதற்காக என்று வித்தகர் காமராசர் கேட்டு விட்டாராம். 66 'ஆகா! அதை கவனிக்காமல் முழு நிலா விழாவா!' எனப் புலம்புகிறார்கள். நல்லவேளை அதற்குள்ளாக ஆந்திர முதல்வர் சென்னைக்கு வந்து, கிருஷ்ணா தண்ணீர் தருவதில் உள்ள சிக்கலை விளக்கி விட்டுப் போயிருக்கிறார். யார் என்ன விளக்கினால் என்ன? ஒரு பொய்யை ஒன்பது முறை சான்னால் அது உண்மையாகிவிடும் என்று நம்புகிற உத்த மர்களின் கூட்ட மாயிற்றே அது ! அதே ஏட்டில் காமராசர் சுற்றுப் பயணம் பற்றி ஒரு வர்ணனை - அழகான படங்களுடன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/68&oldid=1695095" இலிருந்து மீள்விக்கப்பட்டது