உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கலைஞர் ய தவறோ அதைப்பற்றி நாம் கவலைப்படாமல் நம்மாலான விளக்கங்களைத் தருகிறோம். ஆனால் நாம் நடத்திய ஒரு இலக்கிய விழாவைப் பற்றி இவ்வளவு இழிந்த சொற்களை வீசுவதற்கு அவருக்கு எப்படித்தான் இதயம் இடம் கொடுத்ததோ தெரியவில்லை. இந்திர விழாவில் குறிப்பிடுகிற இந்திரன், புராணத் திலே வருகிற அகல்யாவைக் கற்பழித்தவன் அல்ல என்று மிகப்பழம் பெருங்காலத்துச் சோழமன்னன் ஒருவனின் பெயர் இந்திரன் என்றும் அந்தப் பழங்காலத்துச் சோழ வேந்தன் பெயரால்தான் பூம்புகார்த் திருநகரில் சிலப்பதி கார காலத்துக்கு முன்னரே இந்திர விழா கொண்டாடப் பட்டதென்றும் தமிழ்ப் புலவர்கள் சிலர் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதைப்பற்றி எல்லாம் அக்கறை கொண்டு சிந்திப்பதற்கு அருமைப் பெரியவர் பக்தவத்சலம் அவர்களுக்கு நேரமிருக்க நியாயமில்லை. சரி; அவர் குறிப்பிட்டது போல கற்பழித்த இந்திரனாகவே இருக்கட்டும்; புராண ஆபாசத்தைப் பக்தவத்சலம் அகல்யாவைக் இப்போதாவது போன்றவர்கள் ஒத்துக்கொண்டதற்கு நாம் நன்றி தெரிவிக்கத்தான் வேண்டும். ஆனால் ஒன்று! நாம் பூம்புகாரில் நடத்தியது இந்திர விழா அல்ல! "சித்திரை முழுநிலா விழா" என்று தான் அந்த விழாவுக்குப் பெயர் சூட்டியிருந்தோம். அதைக்கூட பக்தவத்சலனார் கேலி புரியக்கூடும். நிலா என்றால் சந்திரன் தானே! சந்திரன் என்ன; இந்திரனை விட மட்டம் தானே! இந்திரனாவது ரிஷிபத்தினி அகல் யாவைக் கற்பழித்தான். சந்திரனோ, குருபத்தினியையே கூடியவனாயிற்றே! என்று இன்னொரு நாள் பேசக்கூடு மல்லவா? . உடன்பிறப்பே, பக்தவத்சலனார் பேசிய பிறகு நானும் யோசித்து யோசித்துப் பார்க்கிறேன்; கற்பழிக்காத இந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/76&oldid=1695103" இலிருந்து மீள்விக்கப்பட்டது