உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 87 என்பது, உடன் பிறப்பே - உனக்கும் எனக்கும்தானே! தெரியும்? தாயும் தந்தையும் படமாக விளங்கிட -பெரியாரும் அண்ணாவும் சிலையாக வீற்றிருக்கும் அந்தச் சிறிய கூடத்துக் ள்ளே நீ குவித்த மாலைகள் ஒவ்வொன்றிலும் நிறைந் திருந்த மலர்களின் இதழ்கள் ஒவ் வொன்றும், என்னைப் பெற்றோர்க்கும் - வளர்த்து ஆளாக்கியோருக்குமல்லவா சொந்தம் என் எண்ணிக்கொண்டு இன்பப் பெருமூச்சு விட்டேன்! அறிவுக்கோ - ஆற்றலுக்கோ - பதவிக்கோ - எதற்கு மல்ல; 'நான் உன்ரத்தம்' என்ற ஒரேஒரு தகுதிக்குத்தான் அணி அணியாக வந்து என்னைப் பாராட்டினாய் என்பதை மறவேன்! லப் பெருமை - குடும்பப் பெருமை - என்ற யரும் பின்னணிகளைக் கொண்டவனல்ல நான்; மிகச் சாமா னியன்; 'உன்னோடு இருக்கிறேன் - அல்லது நீ என்னோடு இருக்கிறாய் என்ற கௌரவத்தைத் தவிர, வேறு கௌரவம் எதுவுமில்லை! ஆனால், எல்லாவற்றையும்விட இதனையே மகத்தான கௌரவமாகக் கருதிக் கொண்டிருப்பவன்! என்னால் உயர்ந்தவர்கள்- என் தோள்களை ஏணிப் படிகளாக்கிக்கொண்டு ஏறியவர்கள் ஈட்டி முனைகளால் குத்திக் குத்தி என் இதயத்திலிருந்து கசிகின்ற இரத்தத் துளிகளைத் துடைத்துவிட்டு மருந்து போடுகிறாய். நீ! ற இப்போது நினைத்துக் கொள்கிறேன் - அவர்களுக்காகச் செலவிட்ட நேரத்தை உனக்காகச் செலவிட்டிருந்தால், இன்னும் எத்துணை அன்பினை உன்னிடமிருந்து பெற்றிருக்க முடியும் நான்! அதனால் என்ன - இப்போது நீ அள்ளிக் கொட்டுகின்ற அன்புக்கு அளவேது? எல்லையற்ற அன்புக் கடலாகவன்றோ காட்சி தருகிறாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/97&oldid=1695124" இலிருந்து மீள்விக்கப்பட்டது