உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் .. டன்பிறப்பே" என்பதுதான் தலைப்பு! 111 எனவே இதயமே எனக் குமுதம் அழைப்பது என் உடன்பிறப் பாகிய உன்னைத்தான்! ஆகாகா! அருமை! அருமை! கலைஞரின் உடன்பிறப்பு, குமுதத்தின் இதயமாம்! ஆம்! குமுதத்தின் இதயம், கலைஞரின் உடன்பிறப்பாம்! நான் சொல்லவில்லை. குமுதமே எழுதியிருக்கிறது! உடன் பிறப்பே! நான் குமுதத்தைக்கூட உடன்பிறப்பாகத்தான் கருதுகிறேன், ஆனால் ஒன்று சரித்திர ஆனால் ஒன்று சரித்திர காலத்திலும் சரி, புராண காலத்திலும் சரி, சகோதரனைக் காட்டிக் கொடுத்த சகோதரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சில இயல்புகளை மாற்ற முடியாதல்லவா? போகட்டும், குமுதத்தின் முழுமுதல் நோக்கமென்ன? எனக்குக் களங்கம் கற்பித்து உன்னை என்னிடமிருந்து பிரிக்க வேண்டும். அன்பாக, அன்றில் பறவைகள் என வாழ்கின்ற கணவன் மனைவியைப் பிரிக்கக்கூடக் கலகக்காரர்கள் கிளம்புவ துண்டு! பில்லி, சூனியம், மந்திரம், தாயத்து, தகடு வைத்தல் என்பன போன்ற தீய முறைகளைக் கையாண்டு பார்ப்பதுண்டு! முடிவில் அவர்கள் தோல்வியே காண்பதுண்டு! தனக்குக் கிடைக்காத பேரழகி ஒருத்தியை அவளுக்கேற்ற அழகன் ஒருவன் மணந்து கொண்டால், அந்த ஜோடிப் புறாக்களின் வாழ்வைக் கெடுக்க, பெண்ணின் மீதோ, அல்லது அவள் பிரியத்துக்குரிய காதலன் மீதோ களங்கச் சேற்றை வாரியிறைக்கும் வில்லன் பாத்திரங்கள், நாடகம் சினிமாக்களில் மட்டுமல்ல நடைமுறை வாழ்க்கையிலும் உண்டு! CONSOILO அந்தப் அத்தகைய கலகமூட்டிகள் களங்கம் கற்பிப்போர்- பட்டியலில் குமுதம், தன்னை இணைத்துக் கொண்டு நாட்கள் பல ஆகின்றன. என்றாலும், இப்போது அது ஏற்றிருக்கிற வேடம்; பூங்கொடி போல் வந்து கண்ணனைக் கொல்ல முயன்ற பூதகியின் வேடம்! கதையில் கண்ணனும் ஏமாற வில்லை; அண்ணனின் தம்பி, தங்கையராம்; நாமும் ஏமாறப் போவதில்லை!