உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கலைஞர் தென் ஆப்பிரிக்க அரசு, கறுப்பு இன மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவில்லையென்பது வெள்ளையர் வெள்ளையரல்லாதாரிடையே குறித்தும், திருமணத் தொடர்புகளுக்கு தடையிருத்தலாகாது என்பது; குறித் தும் அந்த அறிக்கை அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறது. ஒடுக்கப்பட்டுக் கிடப்பவர்களுக்காக வாதாட ஒரு குரல் ஒலிக்கிறதென்றால், ஆதிக்கப்புரியினர் அதனைச் சகித்துக் கொண்டிருப்பார்களா? எனவே அமளி மூண் டது! ஆயுதமணிந்த போலீசாரின் அத்துமீறிய அடக்கு முறை கறுப்பர் பகுதிகளில் ஏவிவிடப்பட்டது! படுகாயங்கள்! பயங்கரச் சம்பவங்கள்! பலிகள்! கறுப்பு இன மக்களின் தலைவர்களைச் சந்திக்கத் தென் ஆப்பிரிக்க அரசு, ஒப்புதல் வழங்கியுள்ளது. இதைப் போலவே இங்கிலாந்து நாட்டில் ஆசிய மக்க ளுக்கு எதிராக இனவெறி தலை தூக்கியிருக்கிற செய்தியைக் கேள்விப்படுகிறோம். தென் ஆப்பிரிக்காவுக்கு ஆயுத உதவி அளிப்பதை நிறுத்துங்கள் என்று பிரான்ஸ் அதிப ருக்கு பிரிட்டனைச் சேர்ந்த நூறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட முறையீடு ஒன்றைக் கொடுத்துள்ளனர் என்ற செய்தியையும் படிக்கிறோம். அதே பிரிட்டனில் ஆசிய மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை வெறியாட்டங்களையும் படிக்கிறோம். வியப் படைகிறோம், வேதனைப்படுகிறோம். காமன்வெல்த் நாடுகளைச் சார்ந்தோர் என்ற லகை யில் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், மேற்கு இந்தியர் களும் பிரிட்டனில் குடியேறத் தனிச் சலுகை பெற்றிருந் தனர். ஆசியர்கள் மிகவும் நேர்மையானவர்கள், கடும் உழைப்பாளிகள் என்ற நல்ல பெயரையும் இங்கிலாந்தில் பெற்றிருந்தனர். எப்படியோ, காழ்ப்புணர்ச்சி உரு