உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கலைஞர் கையைத் தொடங்கினர். அதன் படிப்படியான வேகமான வளர்ச்சிதான் அங்கோலா மக்களின் விடுதலை இயக்க மாகும். எம். பி. எல். ஏ. என்ற அந்த இயக்கத்தின் போர்க்குரல் போர்ச்சுகீசிய ஆதிக்கத்துக்கு எதிராக எழுந்தது. தொடர்ந்த, இடைவிடாத, சலிப்படையாத, போராட்டத்தின் முடிவாக 1975 நவம்பர் திங்களில் அங்கோலாவிலிருந்து போர்ச்சுகல் ஆதிக்கம் வெளி யேறியது. அங்கோலா மக்கள் சுதந்திரப் பள்ளு பாடினர். . அமெரிக்கா போன்ற சில நாடுகள், அங்கோலாவின் விடுதலைக் கிளர்ச்சிக்கு எதிராகச் செயல்பட்டபோதிலும், அங்கோலா மக்களின் உரிமைக் குரலை, இந்திய நாடு அங்கீகாரம் செய்தது! சோவியத் யூனியன் அங்கோலாவின் விடுதலைப் போரை ஆதரித்துத் துணை நின்றது. அமெரிக்கா தலையிட்டதற்கும், சோவியத் யூனியன் துணை நின்றதற்கும் - காரணங்கள் அல்லது நோக்கங்கள் எத்தனை கூறப்பட்டாலும் அங்கோலா, ஆண்டாண்டுக் காலமாக அனுபவித்தக் கொடுமைகளில் இருந்து விடுபட் டதை, யாரும் வாழ்த்திப் பாராட்டாமல் இருக்க முடியாது. விடுதலை பெற்ற அந்த நாடு, ஐ. நா. சபையில் இடம்பெற முறையீடு செய்துகொண்டதை, பரந்த மனப் பான்மையுடன் அமெரிக்காவும் ஆதரிக்க முன்வருமானால், அனைவரின் பாராட்டுதலை அது பெற்றிருக்க முடியும். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள "தேர்தல் தட்ப வெட்பச் சூழ்நிலைகளையொட்டி, அது தனது ரத்து அதிகாரத்தை வீசி, நிராகரித்திருப்பது ஏற்றுக்கொள்ளக். கூடிய போக்கு எனக்கொள்ள முடியாது.