உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் - 131 தானவர், சாதாரண மனிதன் சாம்ராஜ்யாதிபதி, தொண்டன் தலைவன் என்றெல்லாம் வேறுபாடு காட் டாமல் தழுவிக் கொள்ளக்கூடிய ஒரு சக்தி ! அதனை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால், மருத்துவ முறை களால் தள்ளிப்போட முயற்சிக்கலாமே தவிர எந்த ஒரு மனிதனாகட்டும் அல்லது மகானாகட்டும் அதனை அறவே தவிர்த்து வெற்றி கண்டிட இயலாது. "பிறவாதிருக்க வரம் தரல் வேண்டும்; இறவாதிருக்க மருந்துண்டு காண்..." எனக்கூறிய பட்டினத்தாருங்கூட, பிறந்து விட்டால் வ "முடி சார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவிலொரு பிடி சாம்பராய் வெந்து மண்ணாவதுங் கண்டு" வாழ்வின் நிலையாமையைக் குறித்துப் என்று தான் பாடியிருக்கிறார். புகழுடலைக் காத்திட முடியுமே தவிர, பூத உடலைக் காத்திட இயலாது என்பது இயற்கையின் நியதி ! நமக்குச் சாவே இல்லை என்று கருதிக்கொண்டும், நமக்கு நோய்நொடிகளே வராது என்று நம்பிக்கொண்டும் பிறரைக் குறைத்துப் பேசுதல் - பிறர் சாவில் மகிழ்ச்சி காணல் - பிறருக்கு வரும் நோய் கண்டு பூரிப்படை தல்- இவையனைத்தும் இதயமே இல்லாதவர்களின் இயல்பாக அமைந்துள்ளன. - - - - பிறப்பவன் இறப்பது உறுதி - எனினும் அந்த இடைக்காலத்தில் மக்களுக்கான தொண்டினை அறிவியல் வாயிலாகவும், அரசியல் வாயிலாகவும், இலக்கிய வாயிலா கவும், சமுதாயப் பணி வாயிலாகவும், கிடைக்கின்ற . வாய்ப்புக்கள் அனைத்தையும் பயன்படுத்தி அவற்றின் வாயிலாகவும் ஆற்றிட வேண்டும். அப்படித் தொண் டாற்றும்போது கருத்து மாறுபாடுகள், இலட்சிய முரண்