உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கலைஞர் தமயந்திக்குமிடையே தூது சன்ற படலத்தைக் கவிஞர் கள். தங்கள் அழகு தமிழ் ஆற்றலைக் காட்டி வர்ணித்து உள்ளனர்! பழம்படு பனையின் கிழங்கு பிளந்தது போன்ற அலகு களைப் படைத்த நாராய்! நாராய்! நீயாவது என் ஏழ்மை நிலையை என் வீட்டிற்குச் சென்று உணர்த்திடுக என்று கையது கொண்டு மெய்யது பொத்திக் கிடந்த சத்தி முற்றுப் புலவர் வானில் பறந்த நாரைகளைப் பார்த்து தூது போகும்படி வேண்டியதாகப் பாடல் ஒன்றுண்டு, படிக்கப் படிக்கத் தெவிட்டாத தேன்பாகு போல! இப்படிப் பல தூதுப் பாடல்களை நான் மெத்தவும் சுவைத்துப் படித்து அவைகளில் ஒன்றிப் போயிருக்கிறேன். - எனினும், இந்தப் பாடல் என் இனிய உடன் பிறப்பே, கல்லில் உளிகொண்டு செதுக்கிய எழுத்துச் சித் திரமாய் என் நெஞ்சில் பதிந்துவிட்டது! ஆம், அழிக்க முடியாத அளவுக்குப் பதிந்துவிட்டது. குமரி மாவட்டத் தில் 'நீலம்' என்ற புனைப் பெயருடைய ஒரு உடன் பிறப்பு எழுதிய காற்றுவிடு தூதுதான் இது! பகுதி - நாஞ்சில் கலையார்வம் கொண்ட பகுதியல்லவா? மனோன் மணியம் சுந்தரனாரை, கவிமணி தேசீக விநாயகம் பிள்ளையை, கலைவாணரை, முத்தமிழ்க் கலா வித்வரத் தினத்தை. இன்னும் பல கலைமாமணிகளைத் தமிழன்னையின் புகழாரத்தில் இணைத்திட்ட பகுதியன்றோ குமரிப் பகுதி! அந்தப் பகுதி மண்ணின் ஆர்வத்தையும், அழித்திட இயலா உறுதியையும்; அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? என்ற அளவுக்கு வற்றாத பாசத்தையும் தேக்கி, என்னை சென்னைக்கு வந்து பார்க்கமுடியாத உடன்பிறப்புக் களின் சார்பில் இந்த உடன்பிறப்பு தனது கவித்தேரில் காற்றை உட்கார வைத்து எனக்குத் தூது அனுப்பியிருக் கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/16&oldid=1695239" இலிருந்து மீள்விக்கப்பட்டது