உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சால் தழுவுகின்றேன்! உடன்பிறப்பே, என் இல்லம் தேடிவரும் இனிய உள்ளமே! உன்னை இருகை ஏந்தி வரவேற்கிறேன். நெஞ்சால் தழுவிக் கொள்கிறேன். என்று ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா! அழைக்கிறேன். நாள்தோறும் நீ, பேருந்துகளிலும், புகைவண்டி மூலமாகவும், ஏன் நடந்துங்கூட சென்னை நகர் வந்து என்னைக் காண்பதற்குக் காத்திருந்து கழகத் திற்கான கடமையை ஆற்றுகிறாயே. அது சில பேருக்கு எவ்வளவு எரிச்சலை உண்டு பண்ணியிருக்கிறது தெரியுமா? முதலில் அவர்கள் நினைத்தார்கள். விசாரணைக் கமிஷன் நிதியா? யார் தரப்போகிறார்கள்? என்று! இன்று நீ பெரு வெள்ளமெனத் திரண்டுவந்து நாள் தோறும் நிதி வழங்கும் காட்சியைக் காணும்பொழுதும், பணவிடைத் தாள்களின் வாயிலாக நிதியினை அனுப்பி வைக்கும் உன் உணர்ச்சியினை அறியும்பொழுதும், அந்தப் பட்டியலைத் தாங்கி வெளிவரும் அவர்கள் விழிகளில் படும்போது- 'முரசொலி ஏடு கருதிக் க அடா! கருதிவிட்ட செடியென்றல்லவா கொண்டோம். இப்போது கனி குலுங்கும் மரமாக வன்றோ உயர்ந்து நிற்கிறது-ஏச்சால், பேச்சால், ஏகடி யத்தால், எதிர்ப்பால் எதுவும் செய்யமுடியாது என்கிற அளவுக்குக் கழகம் எழுந்து நடமாடுகிறதே என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/27&oldid=1695251" இலிருந்து மீள்விக்கப்பட்டது