உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணனுக்கு கலைஞர் கடிதம் என்னையே காணிக்கையாக்குகிறேன் அண்ணனே, ஜூன் மூன்றாம் நாள் இன்று! என் பிறந்த நாள்! நானு மகிழ்ச்சியோடு இருப்பேன் என்று எண்ணிக் கொண்டுதானே என்னை வாழ்த்துகிறாய்! என் பிறந்த நாளில் என்றைக்கு நான் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன்; இந்த ஆண்டு மட்டும் மகிழ்ச்சியாக இருந்திட! உனக்கு நினைவிருக்கும் அண்ணா; ஒரே ஒரு ஆண்டு மட்டும் விதிவிலக்கு! ஆம் 1968-ஆம் ஆண்டு! அதற்குப் பிறகு, எனக்கு வந்த பிறந்த நாட்களில் நான் சுறுசுறுப்புடன் இருந்திருக்கிறேன். ஓடிவரும் உடன் பிறப்புக்களைத் தழுவிக்கொண்டு அளவளாவி யிருக்கிறேன். மலையெனக் குவிந்த மாலைகளுக்கிடையே இருந்திருக் கிறேன். சிரித்த முகத்தோடு இருந்திருக்கிறேன். ஆனால், அண்ணனே! முக மலர்ச்சியோடு இருந்தேனே தவிர, அக மலர்ச்சியோடு இருந்ததில்லை! அப்படியானால் தம்பி, நடித்தாயா? என நீ கேட் கிறாய்! காதில் விழுகிறது! ஆமண்ணா! நாடகமேடை யேறியும் நடித்துப் பழக்கப் பட்டவன்தானே நான் - அதனால் கொள்கைத் தங்கங் க-7A-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/63&oldid=1695288" இலிருந்து மீள்விக்கப்பட்டது