உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் என். வி. என். உடன்பிறப்பே, ஓராண்டு உருண்டோடிவிட்டது. நமது உயிரனைய தலைவர்களிலே ஒருவர் - என்றும் நம் நெஞ்சைவிட்டு அகலாத என். வி. என் அவர்கள், நம்மைக் கண்ணீரில் நனையவிட்டு மறைந்து ஓராண்டு உருண்டோடி விட்டது. கடைசி மூச்சு வரையில் கழகம் - கழகம் என்றே அவரின் இதயம் துடித்துக் கொண்டிருந்தது. அவரது முதலாண்டு நினைவு நாள் ஆகஸ்டு மூன்றாம் நாள். அந்த நாளில் மட்டுமல்ல எந்நாளும் நினைந்து நாம் உருகுகின்ற நிலை படைத்த பெருமக்களில் அவரும் ஒருவர். கடந்த காலத்தை எண்ணினால் நீண்ட நெடிய பெருமூச்சு வெளிப்படத்தான் செய்கிறது. கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஒன்பதாண்டு காலத்தையல்ல; அதற்கு முன்பு எதிர்க்கட்சியாகச் செயல் பட்ட காலத்தில் ஏற்பட்ட சோதனை மிகு கட்டங்களை யெல்லாம் நாம் தாண்டிவந்தபோது, என். வி. என். அவர்கள் கருமமே கண்ணாகி பசி நோக்காது, உறங்காது, ஓயாமல் உழைத்தாரே; அவற்றையெல்லாம் மறந்து விட முடிகிறதா? இன்று கழகத்திற்கு ஏற்பட்டுள்ள துன்ப துயரங்களை நாம் அனுபவிக்கும்போது அவரும் இருந்திருந்தால்,