உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் எதிர்பார்த்துக் குழம்பிக் கிடப்பவன் கோழை! நாம், நாமாக ஏற்றுக் கொண்ட லட்சியத்திற் காகக் கஷ்ட நஷ்டங்களை ஏற்க உறுதிகொண்ட தால்தான், ஊரிலே பெரிய புள்ளிகள் என்றும், அரசியலிலே 'ஜாம்பவான்' கள் என்றும், அகிலம் சுற்றிய அறிவாளர் என்றும், ஆட்டிப் படைத் திடும் ஆற்றல் மிக்கோன் என்றும் விருதுகள் பல பெற்றவர்கள், நம்முடன் இல்லை, நம் பிரச் சினையை ஆதரிக்க முன் வரவில்லை என்று மிக நன்றாகத் தெரிந்திருந்தும், உள்ள இதழ்கள் அவ்வளவும், நம்மைக் கண்டிப்பதை கடமையா கவும், தூற்றுவதை தொண்டு ஆகவும், கேலி செய்வதைக் கலையாகவும் கொண்டு இயங்கி வருகின்றன என்பதை அறிந்திருந்தும், இவர்கள் முன்வருவார்களா என்பது பற்றிய கவலையு மற்றும், நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற இலட்சி யத்தின் பளுவை நாம்தான் தாங்கியாக வேண்டும்; ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு நாம் தான் ஈடு கொடுத்தாக வேண்டும், இலட்சக் கணக்கானவர்களோ, ஆயிரக்கணக்கிலோ அல்லது நூற்றுக்கணக்கிலோ, எந்த அளவில் நம்முடன் பயணம் நடாத்துபவர் கிடைக்கின் றனரோ அதுபற்றியும் கவலை கொள்ளாமல், நம்மை நாம் ஒரு இலட்சியத்துக்கு ஒப்படைத்து விட்டோம் என்ற உணர்வுடன் பணியாற்றி வருகிறோம். 99 99 அண்ணனின் இந்தப் பொன்மொழிகளை இதயத்தில் பதித்துக் கொண்டுள்ள உன்னைப் போன்ற உடன் பிறப்புக்களை நாள்தோறும் சந்திக்கிறேன் நான்! நிகர் இல்லம் நாடி வருகிறார்கள். வெல்லம் அன்பினைப் பொழிகிறார்கள். கையில் கிடைத்த ஒரு