உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 101 இப்படிப்பட்டவர்களின் உடலுறுப்புக்களை விட, உள்ள உறுதியும் ஊக்கம் குறையாத ஆர்வமும் தானே இந்தக் கழகத்தைக் கட்டிக் காக்கின்றன. சோமுவும், ஜோசப்பும், பாண்டியனும் போன்ற உடன்பிறப்புக்கள் உள்ள வரையில் நாம் சோர்வடைய தேவையில்லை அல்லவா? இவர்கள் கழகத்தில் சுகம் தேடி வந்தவர்களுமல்ல! சுகம் அனுபவித்தவர்களுமல்ல! கழகம் சுகமாக இருக்க வேண்டுமென கருதும் தாயுள்ளம் கொண்ட தங்கங்கள்! இவர்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை இந்தக் கழகத்திற்கு ஒரு ஊன மும் இல்லை! இது உறுதி! அன்புள்ள, மு.க. 3-8-76