உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 105 சென்னையுடன் மைசூர் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும். இந்த மூன்று யோசனைகளில் மூன்றாவது யோசனையை மைசூர் ஏற்றுக்கொண்டு சென்னை அரசுடன் பேச்சு நடத்த சம்மதித்தது. 1921 முதல் பேச்சு நடத்தி 1924-ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தா தானது. இதில் சென்னை அரசு, சில முக்கிய கருத்துக்களில்விட்டுக்கொடுத்து ஒப்பந்தத்தை முடித்தது. 1892-ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையிலேயே 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தமும் உருவாயிற்று. அந்த ஒப்பந்தப்படி முதல் கட்டமாக பழைய பாசன ஆதாரங் கள் உறுதிப்படுத்தப்பட்டன. அதையடுத்து மேலும் இருப்பதாகக் கருதப்படும் எஞ்சிய தண்ணீரில் ஒரு பங்கை உடனடியாகவும், பிறிதொரு பங்கை ஒரு குறிப்பிட்ட வகையிலும் பகிர்ந் திட வழி வகுக்கப்பட்டது. இதற்கு மேலும் எஞ்சிய தண்ணீர் இருந்தால் அதுபற்றி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு (1974) மறு ஆய்வு செய்வதற்கும் ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது. . மைசூரில் கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கம் அமைக்க சென்னை ஒப்புக்கொண்டது. அந்த நீர்த்தேக்கத்தின் கீழ்ப் பாசனப் பரப்பு ஒரு லட்சத்து பத்தாயிரம் ஏக்கர் என்றும் கட்டுப்படுத்தப்பட்டது. தமிழ் நாட்டுக்கு வரம்பு அளவுத் தண்ணீரை (லிமிட் ப்ளோ) தவறாது அனுப்புவதற்கும் அந்த ஒப்பந் தப்படி விதிமுறைகள் அமைக்கப்பட்டன. கிருஷ்ணராஜ சாகருக்கு ஈடாக மேட்டூர் நீர்த்தேக்கம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேட்டூர் அணையால் பயன் பெறக்கூடிய 21848