உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்களுக்கும் காதல் வரும் உடன்பிறப்பே, காதல் காட்சியென்றாலோ, காதல் பற்றிய கவிதை என்றாலோ, அச்சடித்த பதுமை போன்ற அழகி ஒருத்தி கதாநாயகியாகவும் அரும்பு மீசை வாலிபன் ஒருவன் கதா நாயகனாகவும் அமைவதுதான் வழக்கம். ம் நாடகம், திரைப்படம் போன்ற காட்சிகளிலே கூட கதாநாயகர்களும், கதாநாயகிகளும் ஒப்பனைகளின் வாயிலாகத் தங்களை இளவெட்டுக்களாகவும் எழில் உருவங்களாகவும் மாற்றிக்கொண்டு நடப்பதைக் காண் கிறோம். அதனைத் தவறு என்று கூற முடியாது. தாங்கள் இளமைச் செழிப்புடன் இருக்கிறார்களோ இல்லையோ - அழகு மிளிர்ந்திடத் தோன்றுகிறார்களோ இல்லையோ காட்சிகளை சுவைப்பவர்க்கு எதிரில் அவ் வாறு தோற்றமளிப்பதே ஏற்புடையதாகும். - கவிதையிலோ, கதையிலோ காதலர்களைச் சந்திக்க அல்லது வைக்கும் எழுத்தாளன் கவிஞன் எத்துணை அற்புத வர்ணனைகளை அள்ளிக் கொட்டுகிறான். பொன்னைப் போல் ஒளிரும் மேனியென்றும் மின்னைப் போல் இடையாள் என்றும் காதலிக்குப் புகழ் பாடி, விண்ணைப் போல் விரிந்த மார்பன் வீரம் விளைக்கும் காளை என்றும் காதலனைப் போற்றிக் கூறி இருவரையும் இச்சைக்கினிய பச்சைக் கிளிகளாய் இன்ப வானில் பறக்க விடுவதில் அவனுக்கோர் மகிழ்ச்சி.