உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 கலைஞர் அன்பே! அமுதே! கனியே! ரசமே! ரசமே! என்றா காதல் உரையாடல் தொடங்குகிறது? இல்லை! மாசறு பொன்னே ! வலம்புரி முத்தே! காசறு விரையே ! கரும்பே ! தேனே! என்றுதான் காதல்மொழி ஆரம்பமாகிறதா? அதுவு மில்லை! பிறகு எவ்வாறு காதல் பேச்சு முகிழ்க்கிறது? முதலில் குள்ளன் பேசுகிறான். 6 "நீருள் நிழல்போல் நுடங்கிய மென்சாயல் ஈங்கு உருச் சுருங்கி இயலுவாய் ! " நீரில் நெளியும் நிழல் போல உடல் நெளிந்து கூனிக் குறுகிச் செல்பவளே! சற்றே நின்று நான் சொல்வதைக் கேள். ஆகா! என்ன அருமை ! கூன் விழுந்த மேனி அசைவது நீரில் விழுந்த நிழல், அலைகளில் நெளிவதைப் போல இருக்கிறதாம் கவிஞனின் கற்பனையே கற்பனை! உடனே கூனி, குலவுகிறாள் பார்! 66 வல்லுப் பலகை எடுத்து நிறுத்தன்ன கல்லாக் குறள! என்று கொஞ்சிடுகிறாள் அந்தக் கூன் விழுந்த பெண்! அதாவது; சூதாட்டப் பலகையை எடுத்து நேராக நிறுத்தியது போன்ற உயரம் படைத்த குள்ளனே! என்று அழைக் கிறாள். அரசர்கள் ஆடும் சதுரங்கப் பலகை எவ்வளவு சிறியது! அதனை எடுத்து நிறுத்தினால் எவ்வளவு உயரமோ, அவ்வளவு உயரமாம் அவன்! என்ன உவமை! என்ன உவமை!