உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கலைஞர் யத்தில் நடைபெறும் சில சில நிகழ்ச்சிகளைப் பார்க்கும். போது! உடற்பயிற்சி, பழக்கம், கல்வி முதலியன மூலம் மனிதனின் அறிவு விரிவடைந்து மிருகத்திலிருந்து வேறு படுகிறான் என்று மெஸ்லியர் வாதித்தாலுங்கூட, அப்படிப் பட்ட வசதி வாய்ப்புக்களைப் பெற்ற மனிதன் கூட சூழ்நிலைகளின் கொந்தளிப்பால், ஆத்திர வசப்பட்டு, உணர்ச்சி கக்கும் எரிமலையாகிறபோது மிருகங்களைவிடத் தாழ்ந்த நிலைக்குப் போய்விடுகிறான் என்பதே நடை முறை உண்மையாகும். துஷ்ட மிருகங்கள் ஒன்றையொன்று கொன்றிடுவ தில்லை. ஆனால் மனிதன் இன்னொரு மனிதனைக் கொல்லு கிற வன்முறை, இந்த நாகரீக நாட்களிலும் மறைந்திட வில்லை. இதைத்தான் ஜீன்மெஸ்லியர் குறிப்பிட்டு, மனிதனை மிருகத்திற்கும் கொண்டு வந்து நிறுத்துகிறார். வேதனையோடு கீழானவனாகக் வண்ணம் தான், அந்த வாதத்தை மெய்ப்பிக்கும் அன்றாடம் ஏடுகளில் கொலைச் செய்திகளைப் படிக்கிறோம். மகாவீரர், கௌதமபுத்தர், வள்ளுவர், வடலூரார், காந்தியடிகள் முதலியோர் இந்த நாட்டில் தோன்றி அன்பு மார்க்கத்தைப் போதித்த பிறகும் அவர்கள் வழி நின்று அண்ணா போன்ற அரசியல் பெருந் தலைவர்கள் வன்முறையின் கேடுகளை விளக்கிக்கூறி, அதனைத் தவிர்த் திடுமாறு தொடர்ந்து கேட்டுக் கொண்ட பிறகும், வன்முறைகளைத் தடுக்கச் சட்டங்கள், அந்தச் சட்டங்களை இயக்கிடப் பொறுப்பான துறைகள், அந்தத் துறைகளை நிர்வகிக்கும் அரசு இத்தனையும் அமைந்த நிலையிலும், மனிதன் மனிதனாக வாழாமல் மிருகத்தை விடக் கீழாகத் தன்னை ஆக்கிக் கொள்கிற வன்முறைச் செயல் களில் ஈடுபடுவது அறவே நின்றுவிடவில்லை. 4