உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் - 139 செவ்வாய் கிரகத்தைப் பற்றிய நமது ஆராய்ச்சி அது சிவந்த நிறமுடையது என்பதோடு நின்றது அது விண்வெளியில் எப்படி எந்தத் திசையில் நகருகிறது என்ற அளவோடு நின்றது! அதன் பிறகு திருமணத்திற்குப் பெண் பார்க்கும்போது "செவ்வாய் தோஷம்" இருக்கிற பெண்ணா? என்கிற ஜாதக ஆராய்ச்சியோடு முடிவுற்றது. ஆனால் இன்று அமெரிக்க நாடு இரண்டு விண்கலங்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது. முதல் விண்கலத்தின் சேய்க்கலம், செவ்வாயில் இறங்கி, மண்ணை சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறது. அந்தச் சேய்க் கலத்துக்கு ஏற்படும் சிறு அளவு கோளாறுகளைக் கூட பல கோடி மைல்களுக்கு அப்பால் இந்த உலகில் உள்ள விஞ்ஞானிகள், அமெரிக்காவின் ஒரு விஞ்ஞானக் கூட அறைக்குள்ளேயிருந்து கொண்டு, இங்கிருந்தவாறே பழுது பார்த்துச் சரி செய்கிறார்கள். நாமோ, துளிர்த்து வளர்ந்த விண்வெளி அறிவை எங்கேயோ ஒரு கூட்டத்தில் முடக்கிப்போட்டு விட்டு, விபூதி பாபாக்கள், விநோத புருஷர்கள், அற்புத சித்துக். கள், அபூர்வ ஜோதிடங்கள் என்று மூட நம்பிக்கைச் சகதியில் ஆழ்ந்து கிடக்கிறோம். "விஞ்ஞானத்துறை விரைந்து முன்னேறி வருகிறது. இது, உலகை எங்கே கொண்டு செல்லும் என்று யாரும் கூற இயலாது! ஆனால் 'அதற்குச் சோதிடர் பதில் சொல்வார்கள்' என்று சிலர் கூறுவர். சோதிடர் என்போர் மிகவும் அபாயகரமான வர்கள். அவர்களிடம் சோதிடம் கேட்கச் செல்லு வோர் அவர்களைவிட மிகவும் அபாயகரமான வர்கள்"