உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாரும் ஓர் நிறை! உடன்பிறப்பே, 'என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னை கை விலங்குகள் போகும்? என்றெம தின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?' என எரிமலைப் பெருமூச்சு விட்ட விட்ட இந்த மண்ணின் மைந்தர்களைப் பார்த்து; தொண்டு செய்யும் அடிமை! உனக்குச் சுதந்திர நினைவோடா? பண்டு கண்டதுண்டோ? அதற்குப் பாத்திர மாவாயோ?' என்று ஏளனக்குரல் எழுந்தபோது; "பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதியெனும் மானம் துறந்து அறம் மறந்தும் பின் உயிர் பெற்றியை அறிந்தாரேல் சுகமென்று மதிப்பாரோ?" என்ற உறுதி மிகுந்த கேள்வி, குமுறியது! கொண்டு வாழ்வது கோடையிடியெனக் “வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?"