உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தோற்றப் பொலிவை உலகுக்கு உணர்த்திக் விட்டாய் அல்லவா? அதனால் எரிதணல் ஆகின்றார் சிலபேர்! கலைஞர் காட்டி 'எடுத்தேன் கவிழ்த்தேன்” எனப் பேசுவோர் பலருண்டு நம்மை! அவர் போக்கு அது! அவர்கள் கற்ற அரசியல் அது! என்று ஆனால் முன்னாள் முதல்வர் பக்தவத்சலனார் அவர் களும் அதே பாணியைத்தான் பின்பற்றுவது முடிவு செய்துவிட்டாரே; அதை எண்ணிடும்போதுதான் ஏக்கம் பிறக்கிறது எனக்கு! காரணம்; அவரிடம் நாம் எதிர்பார்த்தது வேறு! கருத்து விளக்கங்கள்-கொள்கை விவாதங்கள் - இப்படி அவர் பேச்சுக்கள் அமைந்தால் நமக்கும் நாட்டுக்கும் அவை பயனுள்ளவைகளாகக் கூட இருக்கும். “தி.மு. கழகம் மாநில சுயாட்சி கேட்டது ஏன்?” இப்படி ஒரு பெரிய கேள்வியைப் பெரியவர் எழுப்பி யதும்; நமக்கே கூட ஆவல் ததும்பியது! எதிர்பார்த் தோம் துடிப்போடு; ஏராளமான ஆதாரங்களையும், எண்ணற்ற விளக்கங்களையும் எதிர்ப்பாகத் தரப் போகிறார் என்று! மாநில சுயாட்சியினால் ஏற்படும் தீங்குகள் யாவை? அந்தச் சொல் எப்படி அபாயகரமானது? இப்படி அடுக் கடுக்காக அள்ளி வீசுவார் ஆணித்தரமான வாதங்களை என்றுதான் எண்ணிடத் தோன்றியது! ஆனால் தெரியுமா? அவர் கண்டுபிடித்த காரணம் என்ன “தங்களது ஆட்சியில் நடைபெறுகிற தவறு களை யாரும் தட்டிக் கேட்கக் கூடாது, என்பதற் காகவே, தி. மு. க. மாநில சுயாட்சி கேட்டது”