உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 159 பொதுச்செயலாளர் நாவலர் அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கேற்ப, கழகத்திற்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியினையும் தங்கு தடையின்றி மேற் கொண்டிடுவாய் நீ! உன்னைப்போலவே எல்லா உடன் பிறப்புக்களும் ஓய்வு நேரத்தைக் குறுக்கிக்கொண்டு, உழைக்கும் நேரத்தை விரிவாக்கிக்கொண்டால் உறுப் பினர் சேர்க்கும் வேலை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் நிறைவேறிவிடும். நீ, நினைத்தால் முடியாத காரியமா? வெட்டி வா என்றுரைத்தால் கட்டிவரும் வீரம் மலிந்த உடன்பிறப்பாயிற்றே! இந்தக் கழகம் உன்னைப் போன்ற லட்சோப லட்சம் உடன்பிறப்புக்களின் எழில் வடிவமல்லவா? இதன் இளமைப் பொலிவுக்கு நீ தரும் வலிவன்றோ காரணம்? எத்தனை எத்தனை சோதனைகளை இருபத்தேழு ஆண்டுக்காலத்தில் நீ தாங்கித் தாங்கி, எதிர்ப்புக்களைப் புறங்காணச் செய்திருக்கிறாய்! நீயே கழகம்! கழகமே நீ! நீ சிந்திய வியர்வைத்துளி களின் விளைவே கழகம் ஈட்டிய வெற்றிகள்! கழகம் பெற்ற பெருமைகள்! எனவே, கழகத்தை நான்; அசைவிலே, நடையிலே, பேச்சிலே, மூச்சிலே காணு கிறேன். உன் அப்பப்பா! குலைந்தது கட்சி! தொலைந்தது இனிமேல்! சீந்துவார் யாருமின்றி-சீராட்டும் பாராட்டும் பெறாமல் ‘சீ' என்றிகழப்பட்டுத் தெருப்புழுதியிலே சேர்க்கப் பட்டுவிடும்! என்றெல்லாம் மாட கூடங்களில் இருந்து மமதையை மலையென மனத்தில் வளர்த்துக்கொண் டோர் ஆரூடம் கணித்த நேரத்தில்; என் ஆருயிர் உடன்பிறப்பே! நீயல்லவா நிமிர்ந்து நின்று சுடர் முகம் கோடிக்கதிரவன்கள் கூடிவந்ததுபோல் ஒளி பரப்பி எட்டுத் திசையும் முரசு கொட்டுக என்று முழக்கமிட்டாய்; கோடையிடிகளென! குன்றங்கள் ஒன்றோடொன்று மோதியெழுப்பிய ஒலியென! தூக்கி