உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 175 இலட்சக்கணக்கான மக்களை அந்தப் பூகம்பம் பலி கொண்டது. வெளிநாட்டுக்காரர்கள் தலைநகரிலிருந்து வெளியேறினார்கள். அந்தப் பயங்கரம் மிகுந்த நேரத் திலேகூட மா சே துங், தலைநகரைவிட்டு வேறெங்கும் சென்று தங்கிட விரும்பவில்லை. பாட்டாளி வர்க்கத்தை வாழவைக்க மார்க்ஸ் த்திட்ட தத்துவங்களை சீன நாட்டுக்கு ஏற்ற வகை யில் கையாள்வதாக அவர் முழக்கம் செய்தார். படை சியாங்கே ஷேக்கிற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி, சீனத்தைச் செஞ்சீனமாக்கி, தனது எண்பத்து மூன்றாவது வயது வரையில் எவராலும் அசைக்க முடியாத தலைவராகவும், சீனத்தின் அதிபராகவும் விளங்கிய அந்த அரிமா, மறைந்துவிட்டது. அவர் மறைந்துவிட்டதாக எத்தனையோ முறை வதந்திகள் பரவின. அதனால், இப்போது அவர் உண் மையாகவே மறைந்தபோது மக்களால் நம்பமுடியவில்லை யாம். செய்தி உறுதியானபிறகு சீன மக்கள் கண்ணீர் உகுத்தனராம். சிவப்பு நிறக் கொடியை செவ்வானத்து முகட்டில் ஓங்கிப் பிடித்த தங்கள் தலைவரது பிரிவை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாதுதான் ! சூ என் லாய் 1 சூடே இருவரது பேரிழப் பைத் தொடர்ந்து மிகப்பெரும் இழப்பாக மா சே துங்கின் இழப்பு அமைந்துவிட்டது, சீன நாட்டுக்கு. நாடுகளின் பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்ற ற தலைப்பில் அரசியல் அமைப்புக்கள் உருவாகியுள்ள சீனா போன்ற மக்கள் வாழ்வு, அவர்தம் உரிமை கள், இவைகளைப் பற்றி நமக்கு முழு விபரங்கள் கிடைத்திடவில்லையென்றாலும் மக்களின் மனங்கவர்ந்த மாபெருந் தலைவராக மா சே துங் விளங்கினார் என்பதை யும், அனைத்துலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் சில