உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 கலைஞர் அந்த வங்கக் கடலோரம் படுத்துறங்கி, எங்கள் துன்பக் கண்ணீரை உன் கல்லறை மீது கொட்டிக் குளிப் பாட்டும் நேரம் இவ்வளவு விரைவில் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கத்தானில்லை. அண்ணனே, உன் ஒவ்வொரு ஆண்டு பிறந்த நாளிலும் மகிழ்ச்சியும் சோகமும் இரண்டறக் கலந்த ய புதிய கலவை உணர்வையல்லவா நாங்கள் பெறுகிறோம். ஒரு இன்பமும் துன்பமும்தானப்பா இலட்சியப் பாதையில் மாறி மாறி வரும்; சில சமயம் இணைந்தும் வரும் என்ற கருத்தை உன் பிறந்தநாள் வாயிலாக எங்களுக்குச் சொல்லிக் காட்டுகிறாய்; இல்லையா அண்ணனே! உன்னுடன் சேர்ந்து வளர்ந்த எங்களுக்கு, உன்னால் ஆளாக்கப்பட்ட எங்களுக்கு - நீ என்ன நினைக்கிறாய்; என்ன கட்டளை பிறப்பிக்கிறாய்; என்பதெல்லாம் தெரியும். எங்கள் உயிர் அணு ஒவ்வொன்றிலுமிருந்து எங்களை இயக்குகின்ற தலைவனே! நீ வகுத்ததே எங்களுக்கு வழி! நீ இட்டதே எங்களுக்குக் கட்டளை! வாழ்க நீ; தமிழ் நீ வையகம் வாழ்ந்திடவே! அன்புள்ள தம்பி, மு.க. 15-9-76