உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈத் பெருநாள் சிந்தனைகள் ! உடன்பிறப்பே, முஸ்லீம் உடன்பிறப்புச்கள் ஈத் பெருநாளைக் கொண் டாடும் இந்த நேரத்தில் சிந்தித்துப் பார்த்துச் செயல் படத்தக்கவண்ணம் சில நிகழ்ச்சிகளையும், நபிகள் நாயகத்தின் அறிவுமணிக் கருத்துக்கள் சிலவற்றையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். 66 6 6 கீழே மக்கா நகரை வெற்றி கொண்டு அவர் மதீனாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஒரு நிகழ்ச்சி நடை பெற்றது. வெற்றி வீரராகத் திரும்பும் அவரை ஆயிரக் கணக்கானவர் பின் தொடர்ந்து சென்றனர். செல்லும் வழியில் மாலை நேரத் தொழுகைக்கான வேளை வந்து விட்டது. அதனை அஸர்" எனக் குறிப்பிடுவார்கள். தொழுகைக்காக அவர் முகம், கை, கால்களைக் கழுவிக். கொண்டார். தொழுகைக்கு முன் இப்படிக் கழுவிக் கொள்வதை 'ஒலு” செய்து கொள்ளுதல் என்பார்கள். பெருமானார் ஒலுச் செய்து கொள்ளும்போது சிந்திய தண்ணீரை, அவரைச் சுற்றி நின்றவர்கள் தங்கள் கரங்களில் ஏந்தி தங்கள் முகங்களைக் கழுவிக் கொள்ளத் தொடங்கினர். அதுகண்ட நபிகள் நாயகம்; அவர்களை வியந்து நோக்கி, "நான் ஒலுச் செய்வதில் சிந்திடும் நீரைக் கொண்டு நீங்கள் முகம் கழுவக் காரணம் என்ன?” என்று கேட்டார். உங்கள் மீதுள்ள அன்பையும் மதிப்பையும் காட்டவே இப்படிச் செய் தோம்” என்று அவர்கள் அனைவரும் பதில் அளித்தனர். பெருமானார் மிக்க வேதனையோடு அவர்களைப் பார்த்துக். கூறினார்.