உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கலைஞர் திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அவர்களும் என்னை முதன் முதலாகச் சந்தித்தது அப்போதுதான். ஒரு அன்று நிகழ்ந்த எங்கள் மூவரின் சந்திப்பு, அன்று முகிழ்த்த எங்கள் அன்பு நட்பு, அன்று எங்களிடையே: ஏற்பட்ட பாசப்பிணைப்பு, அன்று எங்களை இணைத்துக் கொண்ட கொள்கைப்பற்று, அன்று எங்களை குடும்பத்துப் பிள்ளைகளாக்கிய பெரியாரின் அரவணைப்பு அன்று எங்களை உடன்பிறப்புக்களாக்கிய அண்ணாவின் இனிய இதயம் இன்றளவும் எங்களை யாராலும், எந்தச் சூழ்நிலையாலும் பிரிக்கமுடியாதபடி ஒன்றாக்கி வைத்திருக்கிறது! இன்று மட்டுமல்ல; என்றுமே எங்கள் இணைந்துவிட்ட நெஞ்சுக்குள் ஊடுருவிச் சிதைத்திடச் செய்யப்படும் எந்த முயற்சியும் வெற்றி பெறப் போவதில்லை. 57-வது - ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாவல் ருக்கு, இந்த நாடும் மக்களும் எவ்வளவு கடமைப்பட் டிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிறேன் . எத்தனையோ சிந்தனைகள் சிறகடிக்கின்றன. ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டு காலப் பொது வாழ்வு இதுவரையில் அவருக்கு! இன்னும் அவர் எழுத்தும் பேச்சும் பணியும் அறிவும் ஆற்றலும் இந்தச் சமுதாயத்துக்கு நிறையத் தேவைப்படுகிறது. அவர் மேலும் பல்லாண்டுக் காலம் வாழ்ந்திட வேண்டுமென்று வாழ்த்துகின்ற நேரத்தில் அவரால் இந்தக் கழகமும், அவர் வளர்த்த இந்தக் கழகத்தால் நாடும் பெற்றுள்ள நன்மைகளை எண்ணுகிறோம் ! அவரை ஏற்றிப் போற்று கிறோம்! அவர் காலடி படாத இடமே இல்லை தமிழகத்தில் என்று கூறிடும் அளவுக்குப் பம்பரமெனச் சுழன்று பட்டிதொட்டியெல்லாம் முழக்கமிட்டிருக்கின்றார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/22&oldid=1695430" இலிருந்து மீள்விக்கப்பட்டது