உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிதம் வதைவிட வாழ்க்கையின் சோதனை மிக்க பிரச் சினைகளை எதிர்த்துப் போராடுவதே முக்கிய மாகும். 37 இந்த அறிவுரைகளை உலகம் முழுவதும் பரப்பி, மனித இனத்தை நேர்மையும், கருணை யும், வலிமையும் வாய்ந்ததாக உருவாக்குவோம்" இந்தக்குறிக்கோளும், விளையாட்டு மைதானத்துக்கு மட்டுமல்லாது எல்லார்க்கும் எல்லா இடத்துக்கும் எல்லா நேரத்துக்கும் பொருந்துகிறது அல்லவா? ய நான் இங்கே எடுத்துக் காட்டிய பாடலையும், குறிக் கோளையும் நெஞ்சில் பதிய வைத்துக்கொண்டுதான் ஒலிம் பிக் வீரர்கள் பின்வருமாறு உறுதிமொழி மேற்கொள் கிறார்கள்! டன், "உண்மையான வீரர்களுக்குரிய உணர்வு வழி முறைகளை மதித்து நேர்மையுடன் போட்டியிட்டு, எங்கள் நாட்டின் பெருமையை நிலைநாட்டுவோம் இந்த உறுதிமொழி, சிலருக்கு உதட்டளவோடு நின்று விடக்கூடும். ஆனால் அவர்கள் ஒலிம்பிக் மைதானத்தில் கேலிக்குரிய மனிதர்களாகவும் கண்டனத்திற்குரிய ஆட் களாகவும் ஆக்கப்பட்டு விடுவார்கள். ய இத்துணை பெருமைக்கும், புகழுக்குமுரிய, ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தில் நமது இந்திய நாட்டு வீரர்கள் ஓரிரு வெற்றிகளையாவது பெற்று வந்து நமது நாட்டுக்குப் பெருமை சேர்ப்பார்கள் என்று எதிர்பார்த்து வா வாழ்த்து வோமாக! அன்புள்ள, மு.க. 20-7-76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/51&oldid=1695459" இலிருந்து மீள்விக்கப்பட்டது