உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கலைஞர் மாதம் நீடிப்பு தரப்பட்டு, அதன் பிறகு குதிரைப் பந் தயம் ஒழிக்கப்பட்டு, உதகையில் இருந்த மைதானத் தையும் கூட அரசு எடுத்துக்கொண்டது. இதற்கிடையே குதிரைப் பந்தய சங்கத்தினர் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். உயர்நீதி மன் றம் சில பரிந்துரைகளைச் செய்தது என்ற போதிலும் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொண்டனர். அத் துடன் தமிழக அரசின் சட்டத்தை நடைமுறைப் படுத் தாத அளவுக்குத் தற்காலிகத் தடையினையும் உச்சநீதி மன்றத்தில் பெற்று சென்னையில் மட்டுமின்றி, உதகை யிலும் குதிரைப்பந்தயத்தை நடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் இன்னும் வழக்கு முடிவடையாமல் இருக் கிறது. இப்போது குழுவொன்று அமைக்கப்பட்டதை யொட்டி, சிந்தனைக்கென சில கருத்துக்கள் உலவவிடப் பட்டுள்ளன. அதாவது குதிரைப் பந்தய சங்கத்தினர், குதிரைப் பந்தயத்தை ஒழிக்கக்கூடாது என்பதற்குக் கூறு கிற காரணங்களாகும் அவை! எ அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு ஆராய் வது கடமையாகும். அகில இந்திய அளவில் குதிரைப் பந்த யத்தைப் பற்றி ஒரு முடிவு எடுக்கும் வரை யில் மாநிலத்தில் குதிரைப் பந்தயம் நீடிக்க வேண்டுமென்கிறார்கள் அந்தச் சங்கத் தினர். அப்படியானால் அகில இந்திய அளவில் நிறைவேற்றப் படவேண்டிய மற்ற கொள்கைகளுக்கு மட்டும் இந்த வாதம் பொருந்தாதா? என்ற கேள்வி, இயல்பாக எழக் கூடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/54&oldid=1695462" இலிருந்து மீள்விக்கப்பட்டது