உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கலைஞர் யள்ளிப்போட்டுக் கொண்டிருந்தார்கள். என் பேச்சு, கழகத்தின் தியாக வரலாறு பற்றிய வேகத்துடன் ஒலித் துக்கொண்டிருந்தது. 6 $ நூற்றுக்கணக்கான தியாகிகள் கண்ணீரும், செந்நீரும் பொழிந்து வளர்த்தது இந்தக் கழகம்" எதிரே இரு என்று கூறிக்கொண்டிருக்கும் போது என் உட்கார்ந்து பொட்டலம் மடித்துக் கொண்டிருந்த வரும் “எங்கள் கட்சியும் கண்ணீரும் செந்நீரும் பொழிந்து தான் வளர்ந்தது" என்று கூறிவிட்டு மேடையைப் பார்த்து பல்லை இளித்தனர். நான், பேச்சை நிறுத்திவிட்டு அவர்களைப் பார்த்து "யார் இவர்கள்?" என்று கேட்ட வாறு மேடையிலிருந்தவர்களை நோக்கினேன். உடனே நாலைந்து தொண்டர்கள் அவர்களிடம் நெருங்கி; "உஸ்! சும்மா இருங்க!" என்று எச்சரித்தனர். அவர்களும் பதிலுக்கு "உஸ்! சும்மா இருங்க!' என்று கூறி விட்டு கூட்டத்தினரைச் சுற்றும் முற்றும் பார்த்து பழிப் புக் காட்டினர். 6 நான் மக்களின் கவனத்தை அவர்களை விட்டுத் திருப் புவதற்காக உரத்த குரலில் "தயவு செய்து நான் சொல்வ தைக் கவனியுங்கள்!' என்றேன். உடனே அந்த இருவரும் என்னைக் காட்டிலும் பலமானக் குரலில் "தயவு செய்து நான் சொல்வதைக் கவனியுங்கள்" என்றனர். அதற்கி டையே காவல் துறையினர் மேடையருகே விரைந்து வந்து அந்த இருவரின் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டு போயினர். பின்னர் 11 மணி அளவில் கூட்டம் முடிவுற்றது. பேச்சை முடித்ததும் நான் அம்பிலையும் பராங்குசத்தையும் பார்த்துக்கேட்டேன், "என்ன; அந்த இருவரையும் கைது செய்து 'லாக்-அப்'பில் வைத்துவிட் டார்களா? என்று!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/58&oldid=1695466" இலிருந்து மீள்விக்கப்பட்டது