உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடி தம் 51 தாக மக்களை ஏமாற்றுவதும் கள்ளக்கடத்தல் போன்ற பெரிய மோசடிதான் என்று அதனையும் பெருங் குற்றப் பட்டியலிலே சேர்த்து நடவடிக்கை எடுத்திட முன்வருமே யானால், இந்த மாய மனிதர்கள் தங்கள் போலி வேடத்தைக் கலைத்துத் திருந்தி விடுவார்கள் என்பதில் ஐயமில்லை. 6 - பெரிய அளவில் நடைபெறுகிற அற்புதத் திருவிளை யாடல்களில் ஐயாயிரம் பத்தாயிரம் எனக் கொடுத்து ஏமாறுகிற வசதி படைத்தவர்களைப் போலவே; சிறிய அளவில் நடைபெறுகிற “சிலுவைக் குழந்தை" - "செவி வழியாகத் தேனும் திருநீறும் வரவழைக்கும் சிறுவன்” என்ற அற்புதங்களில் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் காசையும் தொலைத்து அறிவையும் இழந்து திண்டாடு கிறார்கள். உடன்பிறப்பே, இந்த ஏமாற்று வேலைகளைப் பற்றி நான் ஏற்கனவே பலமுறை கடிதங்களின் வாயிலாகத் தெளிவுபடுத்தியிருக் கிறேன். இப்போது பெங்களூரில் வித்தை காட்டிக் கொண்டிருந்த சிறுவனைப் பற்றிய மோசடிகள் அம்பல மாகியுள்ளன. அற்புதங்கள், மூட நம்பிக்கைகள் பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து உண்மையைக் கண்டுபிடிப்பதற்காக பெங்களூர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள குழுவைச் சேர்ந்தவர்கள், சாதாரண பக்தர்களைப் போல உடை யணிந்து கொண்டு அந்தச் சிறுவனை வைத்து அற்புதங்கள் நடத்தும் இடத்துக்குப் போய் பல கேள்விகளைக் கேட்டு அவனைத் திணற அடித்திருக்கிறார்கள். அவன் சொன்ன பதில் முழுதும் தவறாக இருந்திருக் கிறது. பிறகு அவன் காதிலிருந்து . விபூதி கொட்டப் போவதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/65&oldid=1695473" இலிருந்து மீள்விக்கப்பட்டது