உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 53 கண்டறியவும் தங்களோடு கலந்து பேசவும் தாங்கள் ஒத் துழைத்து தேதி, நேரம் ஆகியவற்றை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த முதல் கடிதத்துக்கு பாபா விடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஜூன் 16-ம்தேதி எழுதப்பட்ட இரண்டாவது கடி தத்தில் குறிப்பிட்டதாவது: இதற்கும் முதல் கடிதம் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறோம். தயவு செய்து தேதியை உடன் அறிவிக்கவும். பாபாவிடமிருந்து பதில் இல்லை. ஜூலை 5-ம் தேதி அன்று குழு சார்பாக பாபாவுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: . என்று நாங்கள் நாங்கள் எழுதிய கடிதத்திற்கு தங்களிடமிருந்து பதில் வராதது வருந்தத்தக்கது. கடவுள் அவதாரம் சொல்லப்படும் நீங்கள், உங்கள் அற்புதத்தை அம்பலமாக்கிய அடுத்த ஐந்தாவது நிமிடமே சாதாரண சராசரி மனிதராகி விடுவீர்கள் என்று அஞ்சுகிறீர்கள் போலும். நாங்கள் சாதாரண மனிதர்கள் என்றும், எங்களை ஒரு கடவுள் அவதாரம் எப்படி சந்திப்பது என்றும் நீங்கள் சொன்னதாகக் கேள்விப்பட்டோம், அந்த வாதம் கோழைத்தனமாகும். தான் யார், என்ன செய்கிறோம் என்பதை ரகசியமாக வைக்காமல் ஊருக்கு வெளிப்படுத்துவதுதான் யோக்கிய மான மனிதனின் கடமை. ஊரை சுலபமாக ஏமாற்ற லாம்; ஆனால் மனசாட்சியை ஏமாற்றிவிட முடியாது. புத்தரும், காந்தியும், விவேகானந்தரும் தங்களைப் போல் எதையும் மூடி மறைக்காமல் தங்கள் வாழ்க்கையைத் திறந்த புத்தகமாக வைத்திருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/67&oldid=1695475" இலிருந்து மீள்விக்கப்பட்டது