உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கலைஞர் அனல் மின் நிலையங்களும் அணு மின் நிலையங்களும் விரிவு படுத்தப்படவும், புதிதாகத் தோன்றிடவும் தீட்டப் பெற்றுள்ளத் திட்டங்கள் செயல்பட்டாலன்றி, மின்சாரத் தேவையை நிறைவு செய்திட இயலாது. நமது நெய்வேலி இரண்டாவது சுரங்க வேலையை நாளைக் குத் தொடங்கினால் கூட அது முடிவு பெறுவதற்கு ஏழு அல்லது எட்டாண்டுக் காலமாகும். கல்பாக்கம் அணுமின் நிலைய உற்பத்தியும் இன்னும் இரண்டு மூன்று ஆண்டு களுக்குப் பிறகே தொடங்கும். இந்த உற்பத்திகள் எல் லாம் தொடங்கினால் கூட, அடுத்த பத்தாண்டு காலத்திற் குப் பிறகு நமது மாநிலம் மின்சாரப் பற்றாக்குறை மாநில மாகத்தான் இருக்கும். இதை மனதிற்கொண்டு மத்திய அரசு, தமிழ் நாட் டில் அனல், அணுமின் நிலையங்களுக்கு அதிக முக்கியத்து வம் கொடுத்திட முன் வரவேண்டியது அவசியமாகும். நீர்நிலை மின் உற்பத்திக்கான திட்டங்கள் பலவற்றை மாநில அரசு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந் தாலுங்கூட அந்தத் திட்டங்களால் கிடைக்கும் மின் உற் பத்தி மிகக்குறைவாகவே இருக்கும். பொதுவாக ஒருநாட்டின் வளர்ச்சியில் முதல் இடத் தைப் பெறுவது மின்சாரம்தான்! ஒரு குடிமகனின் ஒவ் வொரு அசைவிலும் இன்று மின்சாரம் தலையாய இடத்தை வகிக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. எனவே, மின் திட்டங்களை வேகமாக நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டப்பட்டாக வேண்டும். அதற்கிடையே ஏற்படும் மின்வெட்டுத் தொல்லை களைச் சமாளிக்க அரசுடன், பொதுமக்கள் திட வேண்டும். ஒத்துழைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/76&oldid=1695484" இலிருந்து மீள்விக்கப்பட்டது