உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 6 75 காலாறச் செய்வதற்கு உழவர் பெருமகன் இன்னும் ஏன் வரவில்லையென்பதைத் தங்கள் "அம்மா" எனும் அன்பு ஒலியால் கேட்டுக் கொண்டிருந்தன. . வைகறையின் இத்தனை நிகழ்ச்சிகளுக்கும் தொடக்க மாக அந்தக் கோழியின் முழக்கமன்றோ அமைகிறது. அது கூவியதைத் தொடர்ந்துதானே கோயில் மணி கூட ஒலிக் கிறது! குளத்துத்தாமரை இமை விரிக்கிறது! பழுதுண்டு வேறோர் பணிக்கு என உழுதுண்டு வாழ்கின்ற பணியும் ஆரம்பமாகிறது! மக்கள் கோழி எதற் இத்துணை சிறப்புக்கும் காரணமான அந்தக் கூவுவதைக் கேட்டுத் திடுக்கிடுகிறாள் ஒருத்தி! ஏன்? காகத் திடுக்கிட வேண்டும்? காலையில் கடினமான வேலை ஏதாவது காத்திருக்கிறதா அவளுக்கு? இல்லை! வீட்டு வேலை செய்யும்போது நீட்டி முழக்கி வசைபாடும் மாமியாரா வது உண்டா? இல்லை; துரும்பும் தன் மருமகள் மீது படக் கூடாது எனப் பாதுகாக்கும் கரும்பு மொழியுடையாள் தான் அவளுக்கு வாய்த்த மாமியார்! பிறகேன் கோழி கூவி யது கேட்டு அவள் திடுக்கிடுகிறாள்? அதற்கான விளக்கத்தைக் குறுந்தொகையில் அள்ளூர் நன்முல்லையார் எனும் புலவர் அளிக்கின்றார். குக்கூ வென்றது கோழி அதன் எதிர் துட்கென் றன்றென் தூய நெஞ்சம்...' 99 அக்குரல் கேட்ட கோழி குக்கூ என்று கூவியது. வுடனே என் தூய நெஞ்சம் திடுக்கிட்டது. இப்படிப் புலம் புகிற அந்தப் பூங்கொடி, காதலன் தோளைத் தழுவிக் கொண்டு கிடக்கிறாள். இருவரும் அந்த இரவை இன்ப இரவாக்கிக் கொண்டனர். கொஞ்சி மகிழ்ந்தனர். கூடிக் குலாவினர், வஞ்சியே என்றான், என் வாழ்வே என்றாள், உயிரே என்றான், என் உணர்வே என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/89&oldid=1695497" இலிருந்து மீள்விக்கப்பட்டது