உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழமை கட்சிகளும் தொடர்புகளும் உடன்பிறப்பே, -O பழைய காங்கிரஸ் கட்சிக்கும் தி. மு. கழகத்திற்கும் உறவு - நட்பு – ஒன்றுக்கொன்று பரஸ்பரம் துணையாக இருக்கின்றன என்ற வகையில் செய்யப்படு கிற பிரச்சாரம் எந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது என்பதை நீ ஆழ்ந்து. கவனிக்க வேண்டும். தி. மு. கழகத்துடன் பழைய காங்கிரஸ் உறவு பூண்டிருப்பதால் அந்தக் கட்சியிலிருக்கும் தொண் டர்கள் பழைய காங்கிரசிலிருந்து வெளியேறவேண்டு மென்பதுதான் இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமாக இருக்கவேண்டும். 1969-க்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற் பட்டபோது நான் நிருபர்களைச் சென்னையிலும், டெல்லி யிலும் சந்தித்தபோதும், அதன்பிறகு வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின்போது பல்வேறு நாட்டுப் பத்திரிகை நிருபர்களின் கூட்டங்களிலும் கேட்கப்பட்ட கேள்வி. களுக்குப் பதில் அளித்தபோதும் இந்தியாவில் குமரி முதல் இமயம் வரையில் காங்கிரஸ் ஒன்றாக இருப்பது தான் ஜனநாயகத்திற்கு உகந்தது என்றும், காங்கிரசுக் குள் ஏற்பட்டுள்ள பிளவைப் பயன்படுத்தி, தி. மு. கழ கம் தன்னை வளர்த்துக்கொள்ள விரும்பவில்லையென்றும், மீண்டும் காங்கிரஸ் ஒன்றுபட்டு இணைந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என்றும் மிக விரிவாகக் குறிப்பிட் டிருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/94&oldid=1695502" இலிருந்து மீள்விக்கப்பட்டது