உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கலைஞர் பிறந்த இல்லத்தைத் தேசீய நினைவுச் சின்னமாக்கக் கழக அரசு முயற்சி மேற்கொண்ட செயலாகும். அதைப் போலவே ஆறு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் அவர் பெயரால் கிண்டியில் நினைவாலயமும் அமைக்கப் பட்டது. தியாகச்சுடர் காமராஜருக்கும் கழகத்திற்கும் கடுமை யான வாக்குவாதங்கள் நடைபெற்றதுண்டு எனினும் அவரது உழைப்பு, தன்னலமற்ற சேவை, ஓயாப்பணி முதலியவைகளுக்குத் தமிழகத்தின் சார்பில் நமது நெஞ் சார்ந்த நன்றியைத் தெரிவிக்கும் கடமையிலிருந்து கடு களவும் நாம் பின்வாங்கவில்லை. அந்தப் பெருந்தலைவ ருக்கு நாம் காட்டுகிற மரியாதையும், அவர் பெயரால் நினைவகம், சாலைகள், பள்ளிகள் என்றவகையில் நினைவுச் சின்னங்களைக் கழக அரசின் சார்பில் அமைத்ததையும், அந்த விடுதலை வீரர் பிறந்த விருதுநகர் இல்லத்தை அரசாங்கச் செலவில் தேசீயச் சின்னமாக ஆக்கியதையும், அவருக்குச் செலுத்துகிற நன்றிக்கடனாக நாம் கொண் டோமேயன்றி, பழைய காங்கிரஸ் கட்சியின் உறவுக் கான அடித்தள அமைப்பு என்று எண்ணிச் செயல் படவே இல்லை. காமராஜர் அவர்களின் மறைவுக்குப் பிறகு, நண்பர் யா. ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் உள்ள காங் கிரஸ் கட்சி, தன் கொள்கைகளைப் பரப்புவதிலும், தன் கட்சி அமைப்புப் பணிகளை விரைவுபடுத்துவதிலும் ஈடு பட்டிருக்கிறது! அதேபோல் நமது கழகம் தனது ஆக்கப் பணிகளைப் புரிவதிலும், உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே தி. மு. க. வும், பழைய காங்கிரசும் யுதிதாக உறவு கொள்வதா இல்லையா என்று நினைக்கக்கூட இல்லை என்பதுதான் உண்மை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/96&oldid=1695504" இலிருந்து மீள்விக்கப்பட்டது